பிச்சை காசிலும் கொள்ளை!

-நஜீப்-

நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் இலங்கை பல நாடுகளிடம் – அமைப்புக்களிடம் உதவி கேட்டு நிற்பது தெரிந்ததே. சில அமைப்புக்கள் ஏன் பிச்சைக்காரர்கள் முன்பள்ளி மாணவர்கள் கூட இலங்கைக்கு பணம் சேகரித்துக் கொடுத்திருந்ததும் அனைவரும் அறிந்த கதைதான்.

இப்படியாக வருகின்ற பணத்தில் (ஒரு துறையில் மட்டும்) அண்மையில் 120 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றது என்று போட்டுடைத்திருக்கின்றார் சரித்த ஹேரத்.

இவர் முன்னாள் கோப் குழுத் தலைவரும் கூட. இவர் அண்மைக்காலம் வரை மொட்டுக் கட்சி உறுப்பினராக இருந்தவர். இப்போது டலஸ் அணியில் இருக்கின்றார். இவரை மொட்டுக் கட்சிதான் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்திருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கொரோனாவுக்கு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மில்லின் கணக்கான தடுப்பூசியிலும் கமிஷ் (ஒன்று 20 டொலர். அதில் 5 டொலர் கமிஷ்) வாங்கப்பட்டிருந்ததும்,

தாம் இந்த தடுப்பூசியை வாங்கிய தொகையை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சீனாவிடம் இவர்கள் உடன்பாடுகளை எட்டி இருந்தார்கள் என்பதும் கடந்த காலங்களில் இது தெரிய வந்த போது கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: 18.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பறக்கும் பைக்: விலை ரூ.27. கோடி 71 இலட்சம்

Next Story

"நகங்களை பிடுங்கினர், கொடுமைப்படுத்தினர்"