பாலைவனமாகும் தேசம்!

-நஜீப்-

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளி நாடுகளுக்குத் தொழில் தேடிச் சென்றிருக்கின்றார்கள். தற்போது அரசு கொண்டு வந்திருக்கின்ற அசாதாரண வரிதான் இதற்குக் காரணம்.

அதே போன்று எதிர்வரும் நாட்களில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும். அத்துடன் பெருந் தொகையான பெரியியலாளர்கள், தொழிநுட்ப வல்லுனர்களும் தமது தகுதிக்குக் குறைந்த தொழிலாக இருந்தாலும் வெளி நாடுகளில் போய் அதிக சம்பளத்துக்கு வேலை தேடும் நிலை.

இதற்குப் பிரதான காரணம் வரி.; மூன்று இலட்சம் சம்பளம் பெரும் ஒருவர் 80 ஆயிரம் ரூபாவரை வரியை புதிய ஒழுங்கில் செலுத்த வேண்டி இருக்கின்றது.

அண்மையில் இலங்கையில் வங்கியொன்றின் முகாமையாளராக தொழில் பார்த்தவர் கொரியாவில் போய் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது கடலில் விழ்ந்து மரணமான செய்தியை நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தோம். தற்போதய அரசின் அசாதாரண வரிக் கொள்கையால் வல்லுணர்கள் விவகாரத்தில் நாடு பாலைவனமாக மாறும். இது மிகவும் ஆபத்தானது.

நன்றி:20.11.2022ஞாயிறு தினக்குரல்

Previous Story

தம்புனில் அன்வார்  வெற்றி

Next Story

கேவலமான உலக சாதனை!