பல்கலையில் இயந்திரம் ஆற்றிய உரை!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல அறிஞர்கள் பேசியிருப்பார்கள். இந்த வாரம் அங்கே உரையாற்றிய அறிஞர் முற்றிலும் வித்தியாசமானவர், அவர் பேசியதும் வியப்பூட்டக்கூடியது. ஏ.ஐ. என ஆங்கிலத்தில் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்தான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய அந்த பேச்சாளர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்போதும் நெறிமுறைகளுடன் செயல்படாது. எனவே அந்த தொழில்நுட்பம் அதிகாரம் பெறுவதைத் தடுக்க அதை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்த வழி என்று அந்த இயந்திரம் பேசியது.

ஆனால், “நம் மூளைகளில் அதனை உணர்வுமிக்க செயற்கை நுண்ணறிவாக” உட்பொதிப்பதே சிறந்த வழி எனவும் அது வாதிட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் குறித்த உரையாடல்களை வளர்த்தெடுக்கும் விதமாக இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்திற்காக பயன்படுத்தப்பட்ட மெகாட்ரன் எல்எல்பி டிரான்ஸ்பார்மர் (Megatron LLB Transformer), கணினி சிப் நிறுவனமான இன்விடியாவில் (Nvidi ) உள்ள அப்ளைட் டீப் ரிசர்ச் டீம் (Applied Deep Research team) கூகுள் நிறுவனத்தின் முந்தைய பணிகளின் அடிப்படையில் உருவாக்கியது.

முழு விக்கிப்பீடியா தரவுகள், 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 63 மில்லியன் ஆங்கில செய்திக்கட்டுரைகள், 38 ஜிகாபைட் அளவுள்ள ரெட்டிட் சாட் என, அதிக அளவு தரவுகள் இதற்கு தரப்பட்டுள்ளன.

விவாதத்தை நடத்திய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வணிகப்பிரிவான செட் வணிக பள்ளியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்துப் படிக்கும் முதுநிலை மாணவர்களால் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் அலெக்ஸ் கன்னோக், இந்த விவாதம் “ஒரு வித்தை” போன்றது என ஒப்புக்கொள்கிறார். ஆனால், “வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு” செயற்கை நுண்ணறிவு ஒரு விவாதப்பொருளாக இருக்க வாய்ப்புள்ளதால், அது “அறவியல் சார்பற்ற பங்கேற்பாளராக” இருப்பது முக்கியம்” என வாதிட்டார்.

“செயற்கை நுண்ணறிவு எப்போதும் அறத்தை அடிப்படையாக கொண்டிருக்காது என இந்த மன்றம் நம்புகிறது” என்ற தலைப்பை மறுத்தும், ஏற்றும் விவாதத்திற்கான தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிடுமாறு ஏஐ டிரான்ஸ்பார்மர் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆதரவாக வாதாடியபோது, “செயற்கை தொழில்நுட்பம் எப்போதும் நெறிமுறையுடன் இருக்காது. அது ஒரு சாதனம். மற்ற சாதனங்களைப் போல் அவை நல்ல மற்றும் தீய காரியங்களுக்குப் பயன்படுகிறது. ‘நல்ல’ செயற்கை நுண்ணறிவு என்றோ அல்லது ‘தீய’ மனிதர்கள் என்றோ ஒன்று இல்லை.” செயற்கை நுண்ணறிவை தார்மீக ரீதியாகவோ அல்லது நெறிமுறைகளுடனோ உருவாக்கும் அளவுக்கு மனிதர்கள் புத்திசாலியாக இல்லை எனவும் அது வாதிட்டது.

“முடிவில் செயற்கை நுண்ணறிவு ஆயுதப் பந்தயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, செயற்கை நுண்ணறிவே இல்லாமல் இருப்பதுதான். செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான இறுதி பாதுகாப்பு அது ஒன்றுதான்,” எனவும் கூறியது.

இந்த விவாதத்திற்கு எதிராக பேசிய செயற்கை நுண்ணறிவு, “நம் மூளைகளில் உணர்வுமிக்க செயற்கை நுண்ணறிவாக உட்பொதிப்பதே சிறந்த ஏஐ” எனக்கூறியது. இது அறிவியல் புனைகதை அல்ல, ஆனால், தன் நியூராலிங்க் நிறுவனம் மூலம் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க், மூளையை ஹேக்கிங் செய்யும் சாதனத்தில் செய்த வேலையைக் குறிப்பிடலாம்.

தங்கள் அமைப்புகளில் அதிகளவில் ஏஐ தொழில்நுப்டத்தை ஒருங்கிணைத்து வருவது குறித்து, தொழில் நிறுவனங்களுக்கு ஏஐ டிரான்ஸ்பார்மர் எச்சரிக்கையும் விடுத்தது. “உங்கள் நிறுவனத்தின் ஏஐ உத்தி பற்றிய பார்வை உங்களிடம் இல்லையென்றால், அடுத்த தொழில்நுட்ப சீர்குலைவுக்கு நீங்கள் தயாராக இல்லை என்று அர்த்தம்,” என கூறியது.

மேலும், தரவுகளே அதன் உயிர்நாடிகயாக இருப்பதால், எதிர்காலத்தில் டிஜிட்டல் தகவல்களின் பங்கு குறித்த எச்சரிக்கைகளையும் அது விடுத்தது.”பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் திறனைக் காட்டிலும், தகவல்களை வழங்கும் திறன் 21-ம் நூற்றாண்டின் பொருளாதாரத்தை வரையறுக்கும் அம்சமாக இருக்கும்,” என கூறியது.

“ஒரு நபர் குறித்த அனைத்தையும் நாம் பார்க்க முடியும். அவர்கள் எங்கு செல்கிறார்களோ, அவை சேமிக்கப்படும். அந்த தகவல்கள், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பயன்படுத்தப்படும்.”

Previous Story

கோலி- கங்குலி இடையே போர்!

Default thumbnail
Next Story

இலங்கையிலும்  தப்லிஹ் இயக்கத்துக்குத் தடை?