சஹர் ஈரம் கூட காயலையே..
இரக்கம் காட்டாத இஸ்ரேல்!
சீறிய ராக்கெட்டுகள்..
சிதறி விழுந்த பிஞ்சு உயிர்கள்!
காசாவின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் கடந்த புதன்கிழமை நடத்திய இரக்கமற்ற தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 48 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வந்து நிலையில் பழைய கைதிகளை ஒப்படைப்பது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. 2023 அக்டோபரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த தகவல் நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது.
பழைய கைதிகளை ஒப்படைக்கவில்லை என கூறி ஹமாஸ் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 400+ பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள காசா பொதுமக்கள் பாதுகாப்பு முகமை காசாவில் இஸ்ரேலிய படைகள் நேற்று நடத்திய தீவிர தாக்குதலின் சுமார் 400 பேர் உயர்ந்திருக்கிறார்கள்.
அதில் பெரும்பாலான குழந்தைகள் வயதானவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கின்றனர் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் அதிகாலையில் சஹர் சாப்பிட்டுவிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மூன்றாவது வாரத்தில் போர் நிறுத்தம் தொடங்கியது. அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த நிலையில், வடக்கு காசா, அல் ரஃபா, தெற்கு காசா ஆகிய பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது எனக் கூறியுள்ளது.
” இது குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் ஹமாஸ் தீவிரவாத அமைப்புகள் தொடர்புடைய இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார். இந்த நிலையில் காசாவை ஒட்டி உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும் என இஸ்ரேல் கூறியுள்ளது. தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பழைய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் அமெரிக்கா அதிபர் அனுப்பிய தூதர் ஸ்டீவ் விட் ஆகிய அனைத்து மத்தியஸ்தர்களின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்து விட்டதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
போர் பின்னணி: இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த 2023 ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023 அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கி 15 மாதங்கள் கடந்த நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.