பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம்

பலர் சேர்ந்து 1 வருடத்தில் செய்யும் வேலையை சீன ராணுவத்தை சேர்ந்த ஏஐ ஒன்று ஒரே நாளில் முடித்துக் காட்டி உள்ளது. உலகம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக ஏஐ ஆதிக்கம் அதிகம் ஆகி உள்ளது. அசிமோ ரோபோக்கள் எல்லாம் ஆதிகாலத்து ரோபோக்கள் என்று சொல்லும் அளவிற்கு ஏஐ ஆதிக்கம் அதிகரித்துவிட்டது.

எப்படி சாத்தியம்

ஏஐ மூலம் மக்கள் பெறக்கூடிய பல்வேறு வசதிகளுக்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.ஆனால் இவை எல்லாம் வெறும் டீசர்தான். வரும் வருடங்களில் ஏஐ மூலம் வரப்போகும் பயன்பாடுகள் நாம் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்க போகின்றன.

வெறும் கேள்வி கேட்டு பதில் சொல்லும் ஏஐகளை தாண்டி.. நம்முடைய பல பணிகளை செய்ய போகும் ஏஐகள் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆஹா ஏஐ இந்த நிலையில்தான் சீன நாட்டு ராணுவமான சீன விடுதலை ராணுவம் சார்பாக ஏஐ ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு ராணுவ பயன்பாட்டிற்காக இந்த ஏஐ உருவாக்கப்பட்டு உள்ளது.

அரசு

இந்த ஏஐ பலர் சேர்ந்து 1 வருடத்தில் செய்யும் வேலையை சீன ராணுவத்தை சேர்ந்த ஏஐ ஒன்று ஒரே நாளில் முடித்துக் காட்டி உள்ளது. இது தொடர்பாக ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி உள்ளனர். சீனாவை சேர்ந்த கப்பல் தயாரிப்பு, வடிவமைப்பு என்னும் அரசு அமைப்பின் தலைவர் லியோ வெய் சார்பாக இந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.

அரசு இந்த ஆய்வுக்கட்டுரையில்தான் அந்த ஏஐ பற்றி கூறப்பட்டு உள்ளது. அதில் பொதுவாக ராணுவ கப்பல்களை கட்டும் முன் அதை கணினியில் வடிவமைக்க வேண்டும். அதன் டிசைனை செய்வது எளிதல்ல. அதை பல மாதங்கள் செய்வார்கள். பலர் சேர்ந்து செய்தால் 1 வருடத்தில் டிசைனை முடிக்க முடியும். ஏனென்றால் இது சாதாரண கப்பல் அல்ல.

பலத்த ஆயுதங்கள் பொருந்திய ராணுவ கப்பல்கள். அதை டிசைன் செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்த டிசைன் வேலையை நாங்கள் ஏஐயிடம் ஒப்படைத்தோம். அது 1 நாளில் பணியை செய்து முடித்தது. 24 மணி நேரம் மனிதர்கள் சூப்பர் கணினிகளின் உதவியுடன் 1 வருடத்தில் செய்யும் வேலையை இது ஒரு நாளில் செய்து உள்ளது.

24 மணி நேரம்

அந்த அளவிற்கு அந்த ஏஐ மிக சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார். அதோடு 100 சதவிகிதம் முழுமையாக டிசைன் செய்துள்ளது. பொதுவாக மனிதர்கள் செய்யும் டிசைன் சில தவறுகளுடன் இருக்கும். அது 100 சதவிகிதம் சரியாக இருக்காது. ஆனால் இந்த ஏஐ அப்படி அல்ல. அது மிக சிறப்பாக டிசைன் செய்து உள்ளது.

இதில் இருக்கும் 400 கடினமான டாஸ்குகளை அந்த ஏஐ அப்படியே செய்துள்ளது. எப்படி சாத்தியம் இதனால் அந்த ஏஐயை ராணுவ உபகரணங்களை உருவாக்கும் வேளையில் ஈடுபடுத்தலாம் என்று இருக்கிறோம். இந்த ஏஐக்கு நாங்கள் எங்கள் ராணுவ கப்பல்களின் டேட்டாக்களை கொடுத்தோம்.

அதன் டிசைன்களை கொடுத்தோம். அதை எல்லாம் இது ஆய்வு செய்துவிட்டு புதிதாக புதிய டிசைன் ஒன்றை உருவாக்கி உள்ளது. செயல்படுத்தப்பட கூடிய டிசைனை அது உருவாக்கி உள்ளது. அதையும் 1நாளுக்குள் செய்து உள்ளது என்று சீன ராணுவ ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

Previous Story

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

Next Story

ஆஸ்கர் பரிசு: 60 ஐட்டங்களாம்!