பண்டாவுடன் முரண்படும் மகள்!

-நஜீப்-

இலங்கை அரசியலில் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்திய தலைவர்களில் எஸ்.டப்லியு.ஆர்.டி. பண்டாரநாயக்க முக்கியமானவர். அவர் படுகொலைக்குப் பின்னர். அந்தக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்ற அவரது மனைவி ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க பிரதமராகவும் இருந்து வந்திருக்கின்றார்.

Greatness thrust upon SWRD | Daily News

பின்னர் அவரது மகள் சந்திரிக்க பண்டாரநாயக்கு குமாரணதுங்ஹ ஜனாதிபதியாக பதவி வகித்திருக்கின்றார் மகன் அணுராவும் சபாநாயகராக நாடாளுமன்றத்தில் பணியாற்றி இருக்கின்றார். பண்டாரநாயக்காவுக்கு சுனேத்ரா என்று ஒரு மகளும் இருக்கின்றார். அவர்தான் மூத்தவர். அவர் அரசியலில் ஈடுபாடு கொள்ளவில்லை.

Sunethra Bandaranaike Picture by Sarath Pieris

சமூகப் பணிகளில்தான் அவரது நாட்டமும் செய்பாடுகளும் அமைந்திருந்தது. அதனால் அவர் மக்களால் அறியப்படவில்லை. அண்மையில் அவர் வெளியிட்டிருக்கின்ற ஒரு கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகி இருக்கின்றது. தனது தந்தை சிங்களம் மட்டும் அரசகரும மொழி என்று சட்டம் கொண்டு வந்ததால்தான் இன்று இந்த நாடு இந்தளவுக்கு பின்கோக்கிப் பயணிக்கக் காரணம் என்றும் ஒரு ஊடகச் சந்திப்பில் சொல்லி இருக்கின்றார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு சுதந்திரக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி சந்திக்காவும் ஏதாவது புதுவிளக்கம் கொடுக்கக் கூடும் என்பது நமது கணக்கு.

 நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இந்தியா முஸ்லிம்கள் உரிமை குறித்து பேசிய ஒபாமா; நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வி

Next Story

சீனாவிடம் அமெரிக்க சரண்!