பட்டமளிப்புச் சர்ச்சைகள்…!

நஜீப்

(நன்றி: 07.09.2025 ஞாயிறு தினக்குரல்)

தனிப்பட்ட பயணத்துக்கு அரச காசை பாவித்த குற்றச்சாட்டில் ரணில் கைது தெரிந்ததே. இது பற்றி சில  தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.

மைத்திரிக்கு பட்டம் கொடுத்த வுல்வஹெம்ஸ்டன் என்பது கேம்பிரிஜ், ஒக்ஸ்போர்ட் தரத்திலானதொன்றல்ல. அங்குள்ள 130 தனியார் பல்கலைக்கழக தரவரிசையில் இதற்கு 109வது இடம்.

Wolverhampton University recognised for commitment to race equality - Voice  Online

அழைப்புத் தொடர்பாக  சிரிகொத்த கடைசி நேரத்தில் சமர்ப்பித்த கடிதத்தில் பல சந்தேகங்கள். ஆனால் இது பற்றி அன்றைய ஜனாதிபதி ரணிலின் செலாளர்களுக்குத் தெரியாதாம்.

அவர்கள் இது தனிப்பட்ட பயணம் என ஏற்றிருந்தனர். உத்தியோக பயணமானால் இது எப்படிச்சாத்தியம். பட்டமளிப்பு ஏற்பாட்டாளர் ஜெரம் மற்றும் ஊடகப் பிரிவு விழா மண்டபத்தில் ரணில் மனைவி மைத்திரியுடன்  அமர்ந்திருந்ததை உறுதி செய்கின்றனர்.

வழக்கு இருப்பதால் அவர்கள் மேலதிக தகல்களை தவிர்க்கின்றார்கள். மனைவி மைத்திரிகான கடிதம் கூட இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.!

அங்கு ரணில் விரிவுரை நடத்தினார், விசேட அதிதி என்பன அப்பட்டமான பொய்கள்.

Previous Story

முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் விடுதலைபுலிகளின் போர் வாகனங்கள்😳இறுதி யுத்த களம்

Next Story

கேன்சர் தடுப்பூசி வந்தாச்சு..!அதுவும் 100% பலன்!!!