பசில் – வஜிர  இரகசிய திட்டம்! 

ஜனாதிபதி, பசில் ராஜபக்ச, வஜிர அபேவர்தன மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கடந்த வாரம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கலந்துரையாடலில் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது தேர்தல் தொடர்பில் பல சட்ட ஆலோசனையை பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எல்லை நிர்ணய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதன் மூலம் தேர்தலை அதிகபட்சமாக 06 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடியும் என சட்ட ஆலோசனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்சவின் இரகசிய திட்டம்! மறைத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணம் | Srilanka Political Crisis Basil Rajapaksha

இரகசிய கருத்து கணிப்பு ஆவணம்

இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் படி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது பசில் ராஜபக்ச இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பசில் ராஜபக்ச நடத்திய இரகசிய கருத்துக்கணிப்பில் சமகி ஜன பலவேக முதலிடத்திலும், ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு இரண்டாவது இடத்திலும், மொட்டு கட்சி மூன்றாவது இடத்திலும் இருந்துள்ளன.

இதன் காரணமாக பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் உள்ள பசிலின் அறையில் கருத்துக் கணிப்பு அடங்கிய ஆவணமொன்று இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous Story

மஹிந்த  உத்தரவினால்  உறுப்பினர்கள் அதிர்ச்சியில்!

Next Story

ஜமால் கஷோகி கொலை | சவுதி இளவரசர் மீதான வழக்கு தள்ளுபடி: