பசில் நாமல் பின்வாங்கள்!

-நஜீப்-

தனக்குத் தொடர்ந்தும் மொட்டுக் கட்சியிலிருந்து குறிப்பாக பசில் தரப்பில் இருந்து வம்புகள் நடக்குமாக இருந்தால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர தனக்கு வேறு வழிகள் இல்லை என்ற செய்தியை உரிய இடங்களுக்குப் புரியும் படி ரணில் தெரியப்படுத்தி இருக்கின்றார்.

இந்த நிலையில் ஜனாதிபதி அரசாங்கத்தை கலைப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது ஆபத்தானது. எனவே வழக்கம் போல ரணிலுடன் கோழிச் சண்டையைத் தொடர்ந்து நடாத்திக் கொண்டு முடியுமட்டும் காலத்தை ஓட்டுவது நல்லது என்று மொட்டுக் கட்சியில் இருக்கின்றவர்கள் தற்போது முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது.

ரணில் நிருவாகத்துக்கு தான் கொடுக்கின்ற அழுத்தங்களில் இருந்து பிடியை சற்றுத் தளர்த்தி அரசியல் செய்வது என்று பசில் ராஜபக்ஸாவும்  நாமலும் கூட பின்வாங்கி இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொட்டுக் கட்சித் தொந்தரவுகளுக்குப் பதில் கொடுப்பதற்கென்றே ரணில் தரப்பில் ஊடகப் பிரிவென்றும் இயங்கி வருகின்றது. அதனுடாகத்தான் இந்த நாடாளுமன்றம் கலைப்பு பற்றிய கதைகளும் கசிய விடப்பட்டிருக்கின்றன.

நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இந்தோனீசியா பழிவாங்கும் ஆபாசப்பட வழக்கு: வரலாற்று தீர்ப்பு 

Next Story

ஜெலன்ஸிக்கு பெரும் ஏமாற்றம்!