நீதிக்கும்-பொலிசுக்கும் லடாய்

நஜீப்-

கடந்த வாரம் ஜனாதிபதி தலமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கின்றது. அப்போது முஸ்லிம்களின் தனியார் சட்டம் தொடர்பான சில திருத்தங்களை நீதி அமைச்சர் அலி சப்ரி அங்கு முன் வைத்திருக்கின்றார். அப்போது சீறிப் பாய்ந்த பொலிஸ் அமைச்சர், இது என்ன புதுக் கதை-திருத்தம் அப்படி ஏதும்  செய்ய முடியாது என்று கர்ச்சித்திருக்கின்றார்.

பொலிசுக்கு துணையாக விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் ஆஜராகி இருக்கின்றார்கள். நீதி அங்கு தனித்து நின்றிருக்கின்றது. எவரும் நீதிக்கு துணைக்கு வரவில்லை. கடைசியில் ஞானத்தின் அறிக்கை வந்த பின்னர் இறுதி முடிவு செய்வோம் என்று ஜனாதிபதி வாதத்தை முடித்திருக்கின்றார்.

எனவே நடக்கப் போவது என்ன என்பதை நமக்கு ஊகித்துக் கொள்ள முடியும். இது வரை முஸ்லிம்கள் அனுபவித்து வந்து காதி நீதி மன்றம், பலதாரத் திருமணம். இள வயதுத் திருமணம் எல்லாமே அவுட் என்று தெரிகின்றது.?

நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.02.2022

Previous Story

அடித்து நொறுக்குங்கள்-விலாடிமீர் புதின் மண்டியிடோம்-வொலடிமீர் ஜெலன்ஸ்கி

Next Story

"கோமாவுக்குப் போகும் தேசம்"