நிமிர்ந்து நிற்கும்  ஆயிஷா!

தம்மை குறிவைக்கப்பட்ட துப்பாக்கி தோட்டா தொடர்பில் இந்திய கேரளாவின் மூத்த நாடகக்கலைஞரான நிலம்பூர் ஆயிஷா தமது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

இன்று 87வது வயதாகியுள்ள ஆயிஷா, தமது ஆரம்பகால மேடை நாடக வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை பிபிசியிடம் விபரித்துள்ளார்.

1953. நிலம்பூர் ஆயிஷா, 18, மேடையில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரை நோக்கி துப்பாக்கி சன்னம் ஒன்று குறிவைத்தது. எனினும் அவர் சற்று நகர்ந்தமை காரணமாக அவர் உயிர் தப்பினார்.

துப்பாக்கி சன்னத்தையும் எதிர்கொண்டு, நிமிர்ந்து நிற்கும் பெண் ஆயிஷா!

ஜமீலா பாத்திரத்தில் ஆயிஷா

ஒரு முஸ்லிம் பெண், பொது மேடைகளில் நடிக்கக்கூடாது என்ற கோசத்தின் ஒரு கட்டமாகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து, பொல்லுகள், கற்கள் மற்றும் கன்னத்தில் அறைவாங்கியமை உட்பட்ட பல சவால்களுக்கு மத்தியில் அவர் துணிச்சலாக நடித்து வந்தார்.

1950கள் மற்றும் 60களில் தாமும், சக கலைஞர்களும், முற்போக்கு மாநிலமான கேரளாவில் பழமைவாதத்துக்கு போராடியதாக ஆயிஷா கூறியுள்ளார்.

ஆயிஷா ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார்,

எனினும் தந்தையின் மரணத்திற்குப் பின்னர் அவரின் குடும்பம் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

1957ல் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சராகப் பதவியேற்ற இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், கேரளாவில்,நாடகங்களில் பெண்களுக்காக எழுதப்பட்ட வேடங்களில் பெண்களை நடிக்க வைக்குமாறு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து முக்கியப் பாத்திரமாக கருதப்பட்ட இல்லத்தரசி ஜமீலாவின் சவாலான பாத்திரத்தில் ஆயிஷா நடித்தார்.

மதத்தலைவர்களின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும், இந்த நாடகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

துப்பாக்கி சன்னத்தையும் எதிர்கொண்டு, நிமிர்ந்து நிற்கும் பெண் ஆயிஷா!

கன்னத்தில் அறைவாங்கிய ஆயிஷா

இந்த நாடகத்தின்போது ஒருமுறை ஆயிஷா நடிக்கும் போது மக்கள் கல்லெறிந்தனர். அவளைப் பாதுகாக்க முயன்ற சக ஊழியர்கள் தாக்கப்பட்டனர்.

ஒருமுறை, பொதுமகன் ஒருவர் மேடையில் குதித்து, ஆயிஷாவை அறைந்ததால், அவரது செவிப்பறை சேதமானது. அத்துடன் அவருக்கு நிரந்தர செவித்திறன் குறைபாட்டையும் அது ஏற்படுத்தியது.

எனினும் அறைந்தவர் கைதுசெய்யப்படவில்லை. எனினும் இந்த தாக்குதல்கள் தமது பயமுறுத்துவதற்கு பதிலாக தம்மை உற்சாகப்படுத்தியதாக ஆயிஸா குறிப்பிட்டுள்ளார்.

இன்று உத்வேகப் பெண்

பின்னர் அவர் சவுதி அரேபியாவிற்கு ஆயிஸா வீட்டு உதவியாளராக பணிபுரிய சென்றார். அவர் கேரளாவுக்குத் திரும்பியதும், அவர் மீண்டும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்,

அவருடைய சில நடிப்பிற்காக விருதுகளைப் பெற்றார். இன்று பொது நிகழ்ச்சிகளில் பேச அழைக்கப்படுகிறார். அவரை பலரும் ஒரு உத்வேகமாக பெண் என்று மேற்கோள் காட்டுகிறார்கள்.

இந்தநிலையில் திரும்பிப் பார்க்கையில், தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஆயிஷா குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

 ஜனாதிபதி பதவியை ஒழிக்கக்கூடாது-SLMC...?

Next Story

ரஷ்ய-இலங்கை   ராஜதந்திர சிக்கல்