நினைவேந்தல் அடிப்படை உரிமை!

-நஜீப்-

நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்ப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியாகத்தான் இந்த நிகழ்வுகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவர்கள்தான் இதனை எதிர்த்து இனவாத்தை உசுப்பேற்றி வருகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டதுடன், தமது அரசு ஒன்று அதிகாரத்துக்கு வரும் சந்தர்ப்பத்தில் இனப் பிரச்சனைக்கு நிச்சயம் ஒரு தீர்வை நாம் வழங்க ஒரு போதும் பின்நிற்க மாட்டோம் என்றும் அவர் அடித்துக் கூறி இருக்கின்றார்.

திலீபன் நினைவு கூரல் நடாத்தியவர்களை உடன் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்று அனுராவின் முன்னாள் சகா விமல் பேசி இருந்ததும் தெரிந்ததே. இது விவகாரத்தில் அரசின் இந்த மென் போக்கு குறித்து முன்னாள் அமைச்சர் வீரசேக்கரவும் பெரிதாக ஏதும் பேசாதிருந்தது அதிசயமாகும்.

நன்றி:0 2.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இலங்கை மக்கள் பழிவாங்கல், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக அறிக்கை

Next Story

நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைவு