நிகாத் ஜரீன்:  உலக குத்துச் சண்டை தங்கம் 

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

துருக்கயின் இஸ்தான்புல்லில் நடைபெற்று வரும் போட்டியில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை அவர் தோற்கடித்தார்.

இஸ்தான்புல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 12வது பதிப்பில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, 52 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், 30-27, 29-28, 29-28, 30-27, 29-28 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை வீழ்த்தினார்ந நிகாத் ஜரீன்.

முன்னதாக, புதன்கிழமை அவர் பிரேஸிலின் கரோலினா டி அல்மேடாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இதைத்தொடர்ந்து தங்கம் வென்றதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்ற ஐந்தாவது இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருக்கு முன்பு, மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி ஆர்.எல் மற்றும் லேகா கே.சி ஆகியோர் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்

Previous Story

உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்- ரஷ்யா 

Next Story

ராஜபக்ஸாக்களை விரட்டும் சர்வதேச சமூகம்