நாளையும் மறுதினமும் என்பிபி எடுக்கும் முக்கிய தீர்மானங்கள்!

-யூசுப் என் யூனுஸ்-

ஜனாதிபதி செயலாளர் யார்
ஆளுநர்கள் பட்டியல்
அமைச்சுக்களின் செயலாளர்கள்

தேர்தல் பரப்புரைகள் முடிந்து தற்போது ஓய்வாக இருக்கின்ற என்பிபி தலைவர்கள் நாளையம் மறுதினமும் தமது தலைமையகத்தில் கூடி முக்கிய தீர்மானங்கள் பலவற்றை எடுக்க இருக்கின்றார்கள்.

அதன்படி அனுர 22ம் திகதி ஜனாதிபதியானதும் யாரை ஜனாதிபதி செயலாளராக நியமனம் செய்வது. மாகாண ஆளுநர்களாக நியமிக்கப்பட இருப்பவர்கள்.

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் போன்ற முக்கியமான பதவிகளுக்கு நியமனம் செய்ய இருப்பவர்கள் தொடர்பாக அவர்கள் 19,20ம் திகதிகளில் முடிவுகளை எடுக்க இருக்கின்றார்கள்.

அனுர வெற்றியில் அவர்களுக்கு சிறிதலவேனும் சந்தேகம் இல்லை என்பதனையே இந்த விடயத்தில் இருந்து அவதானிக்க முடிக்கின்றது.

Previous Story

ஜனாதிபதித் தேர்தல் 2024 வெற்றி வாய்ப்பு

Next Story

ஜனாதிபதி தேர்தல்: மும்முனைப் போட்டி - முந்துவது யார்? -BCC