செய்தி நாடாளுமன்றத்தை இழுத்து மூடவும்! July 30, 2023July 30, 2023 –நஜீப்– ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் குதறும் கதை என்று ஒன்று வழக்கில் இருக்கின்றது. அது போலத்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் கதையும் இருக்கின்றது. தமக்கு தேர்தலில் வாய்ப்பே கிடையாது என்று நன்கு அறிந்த அவர்கள், இப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆப்பு வைத்திருக்கின்றார்கள். தேர்தல் கோரி நீதி மன்றத்தில் இருக்கின்ற வழக்குகளை சட்ட மா அதிபரை வைத்து நிராகரிக்குமாறு அவர்கள் கேட்டிருக்கின்றார்கள். அந்தக் கதை அப்படி இருக்க, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, நாட்டை ஜனாதிபதி சீரான பாதையில் எடுத்துச் செல்கின்றார். எனவே நாடாளுமன்றத்தைக் இழுத்து மூடிவிட்டு நாட்டை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் சில வருடங்கள் கொண்டுவர வேண்டும் என்று அவர் பகிரங்கமாக் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இந்தக் கொடூரமான வார்த்தைகளை பாவிக்கவும் அதற்கு செயல் வடிவம் கொடுக்கவும் இவர்கள் முயல்வார்கள் என்பது தெளிவு. எனவே நாம் சொல்லது போல் நாட்டில் எந்தத் தேர்தலுக்கும் வாய்ப்பு இல்லை. போராடித்தான் அதனைப் பெற வேண்டி வரும். இந்த வஜிர ரணிலுக்கு மிகவும் விசுவாசமானவர் என்பதும் தெரிந்ததே. நன்றி: 30.07.2023 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in July 1, 2025July 1, 2025 July 1, 2025July 1, 2025 தமிழர்களை இனப்படுகொலை செய்தது இராணுவம் மட்டும் அல்ல..!! July 1, 2025July 1, 2025 இஸ்ரேல் பெரும் தலைகளை தூக்கும் ஈரான்.! July 1, 2025July 1, 2025 ලොකුගේ මැරිලා ගොඩක් කල්…யாழ். நூலகம் எரிப்புடன் தொடர்பு! July 1, 2025July 1, 2025 ශිරන්ති රාජපක්ෂගේ වංචා දූෂණ සහ නීතිය July 1, 2025July 1, 2025 සුනාමි වංචාවට අධ්යක්ෂ ජෙනරාල් කොටුවේ තවත් ලොක්කෝ 2 ක් මාට්ටූ Previous Story "சர்வாதிகாரம்.." இஸ்ரேலில் ராணுவ ஆட்சி? Next Story கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: 9 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!