‘நாகா’ பார்த்த வேலை !

 -நஜீப்-

நாகானந்த கொடித்துவக்கு என்பவர் ஒரு சர்ச்சைக்குரிய மனிதன். நாடறிந்த சட்டத்தரணி. ரணில் போன்றவர்கள் இவரை வம்பன் என்றுதான் அழைக்கின்றார்கள். சரி ஐயா அளக்காமல் கதையைச் செல்லுங்கள் என்றா  கேட்க்கின்றீர்கள்?

இதுதான் விவகாரம். மனிதன் நீதி மன்றத்தில் வழக்கொன்றைப்   பதிவு செய்திருக்கின்றார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா போட்டியிடுகின்ற நேரத்தில் தேர்தல் விதிகளுக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவில்லை. தான், இரட்டைப் பிரசா உரிமைக்காரன் அல்ல என்பதனை உறுதிப்படுத்துவதற்காக ஆவணங்களை அவர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை.

நாகா நெடுநாள் முறைப்பாடு தற்போதுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பேராசிரியர் ராத்னஜீவன் ஹூல் இது பற்றித் தான் அன்று கேள்வி எழுப்ப, ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அதனை அலட்சிம் செய்துவிட்டார் என்றும் சொல்லி இருந்தார்.

கடந்த வாரம் தற்போதய ஜனாதிபதி அன்று ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்பதனை ஹூல் சத்தியக் கடதாசி மூலம் உறுதி செய்திருக்கின்றார்.

கதை நிஜமானால் என்ன நடக்கும் என்று விளக்கம் கேட்க பேராசிரியர் ஹூலைத் தொடர்பு கொண்டோம் அவரது இணைப்பபை நம்மால் அடயமுடிவில்லை.

 நன்றி:03.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நீங்க மேலாடையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும்! மேற்கத்திய நாட்டு தலைவர்களுக்கு புதின் அதிரடி!

Next Story

ஆட்சியாளர்களுக்கு பாடம் எடுக்கும் குவைத் தூதுவர்