நயவஞ்சக அரசியலுக்கு வரும் ஆப்பு!

-நஜீப்-

(நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்)

சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து வருகின்ற தனித்துவத் தலைவர்கள் இந்த முறையும் அதே பாணியில் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார்கள். மலையகத்தில் ஒரு அரசியல் தலைவர் அனுர ஜனாதிபதியானால் அதிலும் நானும் அமைச்சர் என்று ஒரு முறை சொல்லி இருந்தார்.

அதே போன்று இன்று சஜித் அணியுடன் இணைந்தும் தனித்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார்கள். பொதுத் தேர்தலில் அனுர தலைமையிலான என்பிபி. தான் அதிகாரத்துக்கு வரும்.

அப்படி வரும் போது அவருடன் இணங்கிப் போவதற்காக ஒரு முன்னேற்பாடாகத்தான் இந்த முறை முஸ்லிம் தலைவர்கள் காய் நகர்த்தி இருக்கின்றார்கள்.

இந்த தனித்துவத் தலைவர்கள் தெற்கில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாலர்கள் வாக்குகளைக் கொள்ளையடித்து வழக்கம் போல தனது உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள முனைவார்கள்.

ஆனால் இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை விரட்டியடிக்க தெற்கில் குறிப்பாக கண்டியில் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் களமிறங்க இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous Story

மீட்பாளராக வரும் ராசா!

Next Story

பொதுத் தேர்தல் நகைச்சுவைகள்!