நஜீப் பின் கபூர்
நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல்
உப்புச் சப்பில்லாத செய்திகளும் அதனை
நம்பி சந்தியில் நடக்கின்ற விமர்சனங்களும்!

*****
‘ஊழல் அரசியல்வாதிகள் மற்றும்
குறுக்குவழி வருமானங்களை
இழந்த அதிகாரிகள்
என்போர் இந்த அரசு நீடிப்பதை
தாங்கிக் கொள்ள முடியாத
ஒரு மனநிலையில் இருக்கின்றார்கள்.
இவர்கள் அரசுக்கு எதிரான
சதிகாரர்களாக மாறலாம்’

நாம் கிளிப்பிள்ளைகளுக்கு எதனைக் கற்றுக் கொடுக்கின்றோமோ அதனைத்தான் அவை திருப்பித் திருப்பி உச்சரிக்கும். இது தவிர புதிதாக அவை எதனையும் தானாக உச்சரிக்கப் போவதில்லை. இது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். நாம் இந்த அரசியல் விமர்சனத்தில் கிளிப்பிள்ளை பற்றி என்ன பேசிக்கொண்டிருக்கின்றோம் என்று நீங்கள் யோசிக்கலாம்.
இந்த என்பிபி. அரசாங்கத்தில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அடிக்கடி நமது பதிவுகளில் கிளிப்பிள்ளைகள் என்று சுட்டிக் காட்டி வந்திருக்கின்றோம். நாம் அப்படி அவர்களைச் உச்சரித்தது அவர்களைக் கொச்சைப்படுத்தி ஏலனம் செய்வதற்காக அல்ல. அவர்களின் கட்டுப்பாட்டையும் கொள்கைகளை மக்களுக்கு விளக்குவதற்காகத்தான் அப்படி இந்தக் கிளிப்பிள்ளை கதையை சொல்லி வந்திருக்கின்றோம்.
ஆனால் கடந்த வாரம் நாம் வளர்த்த அந்தப் பச்சைக்கிளி காணாமல் போய் விட்டது என்பனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அந்த வலி நமக்கும் இருக்கின்றது. இப்போது நேரடியாக கதைக்கு வருவோம். ஜேவிபி அல்லது என்பிபி. மீது நமக்கு நல்லெண்ணம் இருக்கின்றது. ஜேவிபி. காரணமாக 1988-1999 களில் நாமும் தனிப்பட்ட ரீதியல் பலமுறை நெருக்கடிகளுக்கு ஆளாகி வந்திருக்கின்றோம்.
இதனை நமது உறவுகளும் நமக்கு நெருக்கமானவர்களும் அறிவார்கள். கொள்கை ரீதியில் அவர்களின் கருத்துக்களுடன் எமக்கு உடன்பாடு இருந்தது உண்மை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் அந்தக் கட்சி உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டது கிடையாது.
தனிப்பட்ட இந்த விளக்கத்தை இங்கு ஏன் நாம் பதிவு செய்கின்றோம் என்றால் நமது கருத்துக்கள் தொடர்பாக எவரும் தப்பான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்தக்குறிப்பு.

மீண்டும் பச்சைக்கிளிக் கதைக்கு வருவோமாக இருந்தால் இந்த என்பிபி. உறுப்பினர்களிடையே முரண்பாடான கருத்துக்களை அவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த ஒன்பது மாதங்களாக நாம் எங்கேயும் பாரிய அளவில் பார்த்தது கிடையாது. அதனால் அவர்கள் பச்சைகிளிகள் போல எல்லா இடங்களிலும் பேசுவதை நாம் பார்த்தோம். அந்த நமது நல்லெண்ணத்தின் மீது இன்று கடுமையான காயம் ஏற்பட்டிருக்கின்றது என்பதனை உரத்து உச்சரிக்க வேண்டி வந்திருக்கின்றது.
பிரதமர் ஹரினி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தை முன்னெடுத்துக் கொண்டு போனாலும் நோயாளிகள் சராசரி வைத்தியம் பார்ப்பதைவிட வைத்திய நிபுணர் முன்னிலையில் தன்னை ஆஜர் படுத்துவதில் ஆர்வம் காட்டுவோர் சமூகத்தில் இருப்பது போலத்தான் இன்று அரசு நகர்ந்து கொண்டிருப்பது தெரிகின்றது.
இது ஆரோக்கியமானதல்ல. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன ஜனாதிபதி ஒரு அசாதாரண தலைவராக இருப்பதால் அவரிடம் வைத்தியம் பார்த்து திருப்தி கொள்ளும் ஒரு மனநிலை நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் காணப்படுகின்றது.
அடுத்து கடந்த ஆட்சிகாலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டம் சம்பிரதாயங்களை மதிக்காது தான்தோன்றித்தனமாக நடந்ததால் அவர்களிடம் குடிமக்கள் மட்டுமல்ல ஏனையோரும் ஒரு நியாயத்தை அன்று எதிர்பார்த்திருக்கவில்லை. எனவேதான்
அன்று காட்டுச் சட்டத்தில் அரசுகள் இயங்கி வந்திருக்கின்றன என்பது எமது குற்றச்சாட்டு. அதனால்தான் பொலிஸ் மா அதிபர் தேசபந்து அன்று குற்றச்செயல்களின் பேரசனாக தொழில் பார்த்திருக்க முடிந்தது. அன்றைய சுகாதார அமைச்சர் கொஹெல்லிய ரம்புக்வெல எப்படிப்பட்ட ஒரு கொள்ளையனாக இருந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்த வந்திருக்கின்றார்.
போலி மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்து பல மரணங்களுக்கும் பலபேர் குருடர்களாகவும் காரணமாக இருந்த ஒரு படுபாதகமான குற்றவாளியை புனிதமானவர் என்று இதே நாடாளுமன்றம் பிரேரனை கொண்டு வந்து காப்பற்றியது எதனை சுட்டிக்காட்டுக்கின்றது.? விமல் வீரவன்ச போன்றவர்கள் பல கள்ளக் கடவுச்சீட்டுக்களை பாவித்து உலகம் சுற்றிற்றியது. அதே போன்று ராஜபக்ஸாக்களின் எண்ணற்ற கொள்ளைகள்.

அவரை சுற்றி இருந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பார்த்த அடாவடித்தனங்கள். ஜனாதிபதி மனைவி சிரந்தி 222222222வீ என்ற ஆள் அடையாளத்தை வைத்து கொழும்பு-சுதுவெல்ல வங்கியில் கூட்டுக் கணக்குத் திறந்து பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தபோது இது என்ன ஆள் அடையால இலக்கம் என்று வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்பதாது ஏன்?
அந்தளவுக்கு ராஜபக்ஸாக்கள் அதிகாரிகளைத் தமது தேவைகளுக்குப் பாவித்திருந்ததால்தான் அன்று இப்படி எல்லம் நடக்க முடியுமாக இருந்தது. கூட்டுக் கணக்கில் மற்றுமொருவரின் ஆள்அடையாள அட்டை இலக்கம் 111111111வீ அவர் பெயர் குமாரி. இது எப்படி? முகவரி கால்டன் பங்களா தங்கல்ல.
அன்று அதிகாரிகள் அப்பட்டமான தவறுகளுக்கு சம்மதம் தெரிவிப்பதனைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. எனவே அவர்கள் ஒரு அச்ச உணர்வில்தான் தொழில் பார்த்து வந்திருக்கின்றார்கள்.
மத்திய வங்கியைக் கொள்ளையடிக்க நண்பனுக்கு கதவைத்திறந்து கொடுத்ததுடன் அப்படி தவறுகள் எதுவுமே நடக்கவில்லை என்று குறிப்புப் போட்டவர்கவர்கள் புத்தகம் எழுதிய குற்றவாளியைக் காப்பாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த ஒரு நாட்டை என்பிபி. பதவிக்கு வந்த இரவோடு அல்லது சில நாட்களில் சரிசெய்துவிட முடியும் என்று நாம் நம்பவில்லை.
தவறுகளுக்கு துனைபுரிவோரில் பலர் தனிப்பட்ட ரீதியில் தாமும் இலாபமடைகின்ற ஒரு நிருவாகத்தைதான் ஆட்சிளார்கள் தமது காலத்தில் நாட்டில் அறிமுகம் செய்திருந்தனர். இவை எல்லாம் நீதிமன்றில் இருக்கின்ற விடயங்களாக இருந்தாலும் அன்று நாட்டில் நீதி நியாயம் மதிக்கப்படவில்லை என்பாதனை உறுதி செய்கின்றது என்பதனை உறுதிப்படுத்துவதற்காகத்தான் நாம் இதனை சுட்டிக்காட்டுகின்றோம்.
இப்படி ஆயிரக்கணக்கான ஊழல் பண்ணி அதிகாரத்தில் இருந்தவர்கள் இந்த அரசாங்கத்தை விமர்சிப்பது எந்தவகையில் நியாயமாக முடியும். அவர்களின் கடந்த காலச் செயல்களுடன் ஒப்பிடும் போது தற்போது அதிகாரத்தில் இருக்கும் இந்த அரசு பண்ணியதாக ஏதாவது மோசடிகள்- குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றதா.? அப்படி கதைகள் கட்டிவிடுவோர் ஏன் நீதி மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க்க வேண்டும்.?

இதற்கு முன்னர் ராஜபக்ஸ புதல்வர் சச்சி ரக்கட் பற்றி விமர்சனங்கள் வந்த போது எந்தப் பதில்களும் கொடுக்காமல் இருந்துவிட்டு இந்த சுப்ரின் செட் அறிக்கையை 13 வருடங்களாக ஏன் மறைத்தார்கள்? பிரதமருக்கு இந்த அறிக்கையை தயாரித்துக் கொடுத்த ரேனுக்கா வீரக்கோன் என்ற பெண் அதிகாரியை ராஜபக்ஸ காலத்தில் அந்தப் பதவிக்கு நியமனம் செய்ததும் இந்த சனக்க என்ற மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்தான்.
எனவே இந்த அறிக்கை தயாரிப்பில் அந்த நன்றி உணர்வுகளின் ஆதிக்கம் மேலேங்கி இருக்கின்றது. நாட்டில் இந்த ரக்கெட் தொடர்பாக சிறு குழந்தை கூட நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றது. அன்று இதனைப் புனிதப்படுத்த முடியாதவர்கள் இன்று எப்படி அதனைச் சரி காட்ட முடிந்தது.?
இன்றும் ராஜபக்ஸாக்கள் எந்தவிதமான மனநிலையில் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த கதையை சற்றுப்பாருங்கள், சமூகத்தில் எமக்கிருந்த கௌரவத்தை-மதிப்பை இந்த என்பிபி. அரசு இல்லாமல் செய்து விட்டது காரியாலயம் வைத்துக் கொள்ளமுடியாதநிலை. நமது கடிதத்துக்கு இப்போது எந்த மரியாதையும் கிடையாது இதனால் நமது ஆதரவாலர்களுக்கு ஒரு தொழில் கூட வழங்க முடியாதுள்ளது இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்படி பகிரங்கமாக பேசி இருக்கின்றார் மொட்டுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஸ இது அவர்களின் பிரபுத்துவ மனநிலையும் மக்கள் தமக்குக் கீழ் வாழ்கின்ற ஒரு அடிமைக் கூட்டமாக இருக்க வேண்டும் என்பதனையே இவர்கள் இன்னும் எதிர்பார்க்கின்றனர்.
-802218.jpg)
எனவே இதன் பின்னரும் இப்படி மக்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பவர்களுக்குப் பின்னால் போவதா என்று குடிகள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனாலும் சமூகத்தில் ஒரு சிறு கூட்டம் இருக்கின்றது பிரபுக்களுக்கு கூஜாதூக்கி அவர்களுக்கு அடிமைகளாக காலம் முழுவதும் வாழ்வதுவிட்டு மடிவது என்று. ஆனால் இன்றுள்ள தலைமுறை இதனை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள்?
தேர்தல் காலங்களில் அனுர வெளிநாடுகளில் கோடிக் கணக்கில் மூலதமிட்டிருக்கின்றார் என்ற துசித அல்ஹெலுவ போடுகின்ற நாடகங்களை ஒரு முறை பாருங்கள் தன்னிடமிருந்த அனுர பற்றிய கோவைகளை தனது வாகனத்துக்கு துப்பாக்கியால் சுட்டு எவரோ பறித்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று கூறுகின்றார். பொலிஸ் இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் இவரது கார் கண்ணாடி துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களாகத் தெரியவில்லை என்று கூறுகின்றது.
இதுபற்றி மேலதிக விசரனைகளுக்கு இந்த மனிதனை அழைத்தால் எனது தயாருக்கு சுகயீனம் என்று சொல்லி ஒரு முறை பொலிசுக்கு வருவதை தவிர்த்திருக்கின்றார். மீண்டும் வந்து வாக்குமூலம் தருமாறு கோட்டால் உறவினர் ஒருவர் மரணம் அந்த வேலைகள் இருக்கின்றன என்று கூறி இருக்கின்றார்.
அவரை பொலிஸ் தேடிச் சென்று போது மனிதன் வீட்டில்தான் இருந்திருக்கின்றார். பின்னர் பொலிஸ் அவர் வீட்டில் இருக்கவில்லை என்று சொல்கின்றது இது என்ன? பொலிஸ் இவரது மொபைலைக் கேட்ட போது அவர் அதனைக் கையளித்திருந்தார். ஆனால் அது அந்த சர்ச்சைக்கு உரிய தாக்குதல் நேரத்தில் பாவித்தது அல்ல. அது எப்போதோ பாவித்த ஒன்று, இது பற்றி கேட்டால் நீங்கள் கேட்கும் அந்த கையடக்கத் தொலைபேசியைக் காணவில்லை.
எங்கோ தவறிப் போய்விட்டது நானும் அதனைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றேன் என்பது அவர் தரும் பதிலாக இருந்தது. இந்தக் கதைகள் எல்லாம் நமக்கு எதனைப்புரிய வைக்கின்றன?
இந்த ஒரு சிறு சம்பவத்தையும் பாருங்கள் அண்மையில் அனுராதபுரம் கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் கருவுற்றிருந்த கிராமத்து மக்களின் செல்லப்பிராணியாக இருந்த ஒரு மான் பொலிசாரால் இரச்சிக்காக சுட்டுக் கொல்லப்பட்டது. அதற்கு எதிராக ஊரேதிரண்டு வந்து போராடியது. இந்தச் செய்தி முழு நாட்டிலும் வைரலானது. இப்போது அந்தக் கிராமமே பொலிசாரால் பலி தீர்க்கும் நிலைக்கு ஆளாகி வருகின்றது.
போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த மக்கள் இன்று துன்புறுத்தப்படும் நிலை தொடர்பாக நாளாந்தம் முறைப்பாடுகள் அங்கிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சம்பவம் இன்னும் பொலிஸ் கூட இந்த அரசின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்பதற்கான ஒரு நல்ல ஆதாரம்.புதிய பொலிஸ் மா அதிபர் கீழ்மட்டத்தில் இருந்து வந்த ஒருவராக இருப்பதால் மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மிகச் சிறிய ஒரு தொகைளினர் என்று அரசும் அதிகாரிகளும் சொல்லிக் கொண்டாலும் அது உண்மையல்ல. பொலிசில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கின்றார்கள். இதற்கு ஒவ்வொரு குடி மகனும் சாட்சி என்பதுதான் நமது கணிப்பு. இது போல தான் இந்த அரசாங்கத்தின் ஏனைய துறைகளும் இயங்கி வருகின்றன. சிச்சி ரக்கட் கதையும் இப்படியான ஒன்றுதான்.
இந்த அரசு பதவிக்கு வந்ததால் குறுக்கு வழிகளில் வருமானம் ஈட்டியவர்கள் இன்று பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். அன்றாட வருமானத்தை இழந்திருக்கின்றார்கள். எனவே அரசுக்கு எதிராக நிருவாக ரீதியில் சதி செய்ய அவர்கள் என்றும் தயாராகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
கோடிக் கணக்கில் மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளும் தமது தனிப்பட்ட பொருளாதார இழப்புக்களினால் இன்று தமது வருமானங்களை இழந்து வருகின்றார்கள்.
அதனால் அவர்களும் இந்த அரசை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்களாக இருந்து வருகின்றார்கள். நமது இந்தக் குற்றச்சாட்டுக்களின் யதார்த்தத்தை இந்த அரசும் புரிந்துதான் வைத்திருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். இதனை அரசுக்கு ஒரு எச்சரிக்கைக்காகத்தான் நாம் இங்கு பதிகின்றோம். என்பிபி.யில் 57பேர் சஜித்துடன் இணைகின்றார்கள் என்ற கதையும் பிரதிப்பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரனைகள் எல்லாம் பிசு பிசுத்துப் போகும் போது நாம் தோல்வியைத் தெரிந்து கொண்டுதான் இதனைச் செய்தோம் என்று அப்போது சொல்லி சமாளிப்பார்கள்.
இதனை வருகின்ற நாட்களில் நாம் பார்க்க முடியுமாக இருக்கும். பிரதமர் ஹரினி எமது சொத்து அவரை நாம் பாதுகாப்போம் என்று ஆளும் கட்சி கொரோடா பிமல் ரத்நாயக்க கூறி இருக்கின்றார். இவர்தான் ஹருனியை விரட்டிவிட்டு பிரதமராகப் போகின்றார் என்று எதிரணியினர் கதை சொல்லி இருந்தனர்.





