‘நன்றி”

காட்டுத் தீ

-யூசுப் என் யூனுஸ்-

உலக வரலாற்றில் நாம் சில நிகழ்வுகளைப் புத்தகங்களில் படிக்கின்றோம் அதில் அவ்வப்போது சில சம்பவங்கள் நினைவு கூரப்பட்டும் வருகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் மனித வரலாறு என்று துவங்கியதோ அன்று முதல் நடந்து கொண்டதான் வருகின்றன. மனிதன் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானம் ஆதாரங்களை வெளியிட்டாலும் அந்தக் கதைகள் ஏட்டுச் சுரக்காய் வடியில்தான் இன்று வரை இருந்த வருகின்றது. எனவேதான் விஞ்ஞானத்தின் உச்சியில் கொடிகட்டிப் பறக்கின்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட இந்தப் பரிணாமக் கொள்கை சமூக அளவில் அங்கிகாரம் பெறாமல் இருக்கின்றது என்பது நமது வழக்கமான வாதம்.

இந்த வரலாற்று நிகழ்வுகளை சமூக சமய ரீதியல் பார்க்கின்ற போது. அதிலும் பல்வேறு கொள்கைகள் கோட்பாடுகள் இருந்து வருகின்றன. அவை பிளவு பட்ட நிலையில் இருந்தாலும் பரிணாமக் கொள்கையை விடப் பலமாகத்தான் தமது சமயத்தில்-சமூகத்தில் சக்தியுடன் இருக்கின்றது என்பது எமது மற்றுமொரு கருத்து. இப்போது நாம் வாழ்கின்ற சமூகத்தில் நடந்திருக்கும் புரட்சிகரமான மாற்றங்களை சிலவற்றை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். மனித வரலற்றில் பெரும்பாலான சமூகங்கள் ஆதம் ஏவல் கொள்கைகளுடன் உடன்படுகின்றன. குறிப்பாக கிருஸ்தவ இஸ்லாமிய சமூகங்கள் இது விடயத்தில் ஒரே கொள்கையில் இருக்கின்றன. அந்தவகையில் பூமிக்கு வீசப்பட்ட சம்பவமே மனித குல வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை என்று எடுத்துக் கொள்ளலாம். அதற்காக ஏனைய சமூகக் கொள்கைகளை நாம் இங்கு விமர்சனம் பண்ண வரவில்லை. அதற்கான உரிமையும் நமக்குக் கிடையாது அது வேறு விடயம்.

அதே போன்று மனித வரலாற்று யுகங்கங்களில் பல பிரழ்வுகள் நடந்தேறி இருக்கின்ற. கற்காலம் வேடுவர் காலம் அதற்கு முந்தியகாலம் நவீன காலம் என்று அது பல்வேறு மறுதல்களைப் பெற்றிருக்கின்றது. இதில் மனிதன் விண்ணுக்குப் போனதும் ஒரு மபெரும் வரலாற்று நிகழ்வாகும். ஆனால் நாம் மேற்சொன்ன எந்த தலைப்புக்கள் பற்றியும் இங்கு பேசவரவில்லை. நாம் கொடுத்திருக்கின்ற தலைப்புப்படி அரசியல் பற்றித்தான் இங்கு பேசவேண்டி இருக்கின்றது. மனித குலத்தில் ஏற்ப்பட நாகரிகங்கள். சிலுவைப் பேர் அமெரிக்க கண்டுபிடிக்கப்பட்டது உலகம் பூகோள வடிவானது என்ற நிறையவே புரட்சியகள் மாறுதல்கள் நிகழ்வுகள் கண்டு பிடிப்புக்கள் என நிறையவே இருக்கின்றன. அவை கூட நமது கருப்பொருள் அல்ல.

சமகால கால வரலாற்றில் மனித குலத்துக்கு ஒரு சின்னத் தீவான இலங்கை ஏதாவது உலகிற்கு அறிமுகம்களைச் செய்திருக்கின்றதா என்று கேட்டால் இந்தக் கட்டுரையாளனின் தனிப்பட்ட கருத்து அப்படி ஏதுவுமே கிடையாது என்பதுதான். இதுவரை இங்கு சொல்லப்படுகின்ற அனைத்துக் கதைகளும் காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுக் கதைகள்தான் என்பதும் எமது வாதம். அப்படிப்பட்ட நமது நாடு உறுப்படியாக உலகிற்கு ஏதாவது ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது என்றால் இந்த ‘அரகலய’ அல்லது ‘கோட்ட கோ ஹோம்’ என்பதனைத்தான் நாம்மால் சொல்ல முடியும். அதற்காக அந்தப் போரட்டத்தின் சிற்பிகள் அதற்காக அணுவளவேனும் பங்களிப்புச் செய்த ஜீவன்கள் அனைத்துப் பேருக்கும் நமது நன்றிகள்.

நமது நாடு உலகிற்குக் காட்டிய ஒரு அரசியல் நாகரிகம் என்று நாம் ஏன் இதனைச் உச்சரிக்கின்றோம் என்று இப்போது பார்ப்போம். 2015ல் மைத்திரி-ரணில் நல்லாட்சியும் அது குட்டிச்சுவராகியதும். அதன் பின்னர் ராஜபக்ஸாக்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற ஒட்டு மொத்த குடிமக்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கள் குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஊமைகளாகவும் தமது பிடிக்குள் வைத்துக் கொண்டது. அதற்ககாக என்னென்ன பொய்களை அபாண்டங்களைச் சொல்ல முடியுமே அத்தனையையும் சொன்னார்கள். அத்தனையையும் பேரின சமூகங்கள் நம்பியது. இவை எல்லாவற்றையும் விட அதிர்ச்சியான செய்தி என்ன வென்றால் 2500 வருடங்கள் பழைமை வாய்ந்த புத்த சிந்தனைகனைக் கூட இவர்கள் அடியோடு சிதைத்து அந்தப் புனித பௌத்ததிற்கே பெரும் களங்களை ஏற்படுத்தி விட்டார்கள். பௌத்தத்தின் பேரைப் பாவித்து கற்பனைக்கும் தர்மத்துக்கும் எட்டாத கதைகளைச் சொன்னார்னர்கள்.

அந்தக் கதைகள் கூட கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உண்மை என்று கருதப்பட்டது. இப்படியாக உருமாற்றப்பட்ட ஒரு சமூகத்தை நாட்டை இரண்டு மூன்று வருடங்களுக்குள் மீண்டும் தலைகீழாக மாற்றி மக்களுக்கு உண்மையையில் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று பகிரங்கமாக அடித்துக் கூறியது இந்த ‘கோ ஹோம் கோட்ட’ ஊர்க்காரர்கள் தான். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் ஐக்கியமாக வாழ்ந்த நமது உறவுகளை அன்னியப்புடுத்தி விட்டார்கள். அநீயாயத்தை நியாயமாக்கி அதர்மத்தை தர்மாக்கியதும் இதே ராஜபக்ஸாக்கள்தான் என்று அடித்துக் கூறியது  இந்த இளவுகள்தான். இன்று அப்படிப்பட்ட கதைகளைப் புனைந்தவர்களும் அதற்கு உருவம் கொடுத்த ஊடகங்களும் தலைதெரிக்க ஓலித்தோடிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையை நாட்டில் உருவாக்கியவர்களே இந்தப் போராட்டக்காரர்கள்தான்.

அரசியல் போராட்டங்களை நடத்துவதும் அதற்குத் தலைமை தாங்குவதும் அரசியல் தலைவர்கள்தான். மீண்டும் ஒரு முறை உலகைத் திரும்பிப் பாருங்கள் ரஷ்யாப் புரட்சி அங்கே லெனின் சீன விடுதலைப் போராட்டம் அதில் மாவோ சேத்துங் இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள் அதற்கும் ஒரு மகாத்மா என்ற தலைவன். தென்னாபிரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கே ஒரு நெல்சன் மண்டேலா இப்படியான தலைவர்கள்தான் நமது ஞாபகத்துக்கு வருகின்றார்கள் ஆனால் இங்கு எந்த அரசியல் தலைவர்கள் போரட்டத்துக்குத் தலைமைத்துவம் கொடுத்தது.?

இது அகிம்சை வழியிலான மக்கள் போராட்டம் என்றுதான் உலகத்தாரால் பார்க்கப்பட்டது. ஆயுதத்தை ஆயுதபலம் கொண்டுதான் வெற்றி கொள்ள வேண்டும். அதுதான் நியதி என்று இதுவரை உலகம் நம்பியது. ஆனால் வன்முறையும் அடவடித்தனமும் மிக்க ஒரு அரசையே அகிம்சைப் போராட்டத்தால் வெற்றி கொள்ள முடியும் என்பது இன்று நமது போராட்டக்காரர்கள் உலகிற்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள்

ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தில் இருக்கின்ற போது அவர்களுடன் டீல் அரசியல் செய்து பிழைப்பு நடத்தியவர்கள் இன்று பட்சோந்திகள் போல் தமது நிறங்களை-உருவங்களை மாற்றிக் கொண்டு வருவதையும் போராட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான நமது அரசியல்வதிகளில் இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள். இவர்களில் எவராவது இந்த ராஜபக்ஸாக்களுக்கு எதிரான போராட்டத்துக்குத் தலைமைத்துவம் கொடுத்தார்களா? பாருங்கள் வீடு எரிகின்ற நேரத்தில் சுருட்டுப்பிடிப்பதற்கு நெருப்புகன் கேட்பது போல் இந்த நெருக்கடியான நேரத்தில் அமைச்சர் நிமல் சிரிபால ஜப்பானிடம் லஞ்சம் கேட்டதற்காக அவரை ஊழல் மிகுந்த ஜனாதிபதி கோட்டாவே இவரை அண்மையில் பதவி விலக்க வேண்டி வந்தது. மக்களுக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய அரசியல் தலைமைத்துவங்கள் நாடாளுமன்த்தில் கோமாளிக் கூத்தாடிக் கொண்டிருந்த நேரத்தில் தான் இளசுகள் களத்தில் குதித்தனர். அந்த நேரத்தில் கூட இவர்கள் பலத்தைப் புரிந்து கொள்ளாத விமல் வாசு தினேஷ் போன்றவர்கள் இவர்களை  ஏளனம் செய்தனர்.

இந்தப் போராட்டக் களத்தில் பல்வேறு சமூக மட்டங்களைச் சேர்ந்தவர் இருந்தார்கள். கல்வி மட்டம் சமூக மட்டம் மற்றும் அவர்கள் வளர்ந்த- வாழ்கிகன்ற சமூகச் சூழல்களும் இதில் ஆதிக்கம் செலுத்தி இருக்கலாம் அப்படிப் பலதரப்பட்ட மக்களை வைத்து இந்தப் போராட்டத்தை கட்டுக் கோப்புடன் முன்னெடுப்பது என்பது எவ்வளவு சிரமமான பணியாக இருந்திருக்க வேண்டும் என்பதனை ஒரு முறை கற்பனை செய்த பார்க்க வேண்டும். கோட்டா என்ற ஜனாதிபதி எப்படிப்பட்ட ஒரு பயங்கரமான ஆள் என்பதனை சர்வதேசமே அறிந்த கதை. அவ்வாறான ஒரு தலைவருக்கு எதிராக வெரும் கையுடன் அகிம்சை வழியில் மோதுவது என்பது எவ்வளவு ரிஸ்க்கான செயலாக இருந்திருக்க வேண்டும்.? இந்தப் போராட்டத்தின் உருவாக்கம் அதன் நெறிப்படுத்தல் செயல்பாட்டாளர்கள் என்று சில கதைகளை சொல்ல வேண்டி இருக்கினது. அந்தத் தகவல்களும் நம்மிடம் இருந்தாலும் இப்போது அதனை நாம் பேசவில்லை பிரிதொரு சந்தர்பத்தில் அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக மனிதனிடத்தில் தன்னலம் என்ற ஒன்றும் கூடவே பிறப்பது இயல்பானது. அப்படிப்பட்ட மனித வர்க்கத்தில் இருந்து இப்படியும் தியாகிகள் கூட்டமா? என்று உலகமே திரும்பிப்பார்க்குமளவுக்கு இந்தப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. சிலர் இதனைக் கேளிக் கூத்து சிறுகள் களியாட்டக் கூடம், காதலர்கள் சந்திக்கின்ற இடம் என்றெல்லாம் கதைகளைக் கட்டவிழத்து விட்டிருந்தனர் என்பதும் நினைவில் இருக்கலாம். இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது அதில் இரவு பகலாக தங்கி இருக்கின்றவர்கள் பட்ட அசௌகரிகங்கள் வீடுகளில் இருக்கின்ற அவர்கள் பெற்றோர்கள் உறவுகள் மன நிலை என்பவைகளும் சிந்தித்துப்பார்க்கபட்ட வேண்டும்.

இந்தப் போராட்டம் தோற்றுப் போய் இருந்தால் அதற்கான பலியும் இவர்கள் தலையில்தான் வந்து விழும் அபாயமும் இருந்தது. அதில் ராஜபக்ஸாக்கள் வெற்றி பெற்றார்கள் என்று நிலமையை எண்ணிப்பாருங்கள்.? ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் சிறைகளிலும் இருக்வும் வேண்டி வந்திருக்கும். இன்று போராட்டம் தனது பிரதான இலக்கை எட்டி இருக்கின்றது. ஆனால் முற்றுப் பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற போராட்டத்துக்கு இப்போது உரிமை சொல்ல பல பெற்றோர்கள் வருவதும் இயல்பானதுதான். ஆனால் தியாகிகளுக்குத் தான் அதன் உண்மையான உரிமை வரலாற்றி ஏழுதப்பட வேண்டும்.

நமது கருத்துப்படி அதர்மத்துக்கு எதிரான இந்த இளசுகளின் போராட்டத்தில் தர்மத்தின் உதவியும் நிறையவே கிடைத்திருக்க வேண்டும். இலங்கை வரலாற்றில் இப்படியான ஒரு வன்முறை மற்றும் கொள்ளைக் குடும்பத்தை நாடு இதுவரை கண்டிருக்கவில்லை. தமக்கென அரச படைகள் தனியர் படைகள் பாதள உலக கொலைகாரர்கள் என்றெல்லாம் அடியாட்களை வைத்துத்தான் இந்த ராஜபக்ஸாக்கள் நாட்டை வழிநடாத்திக் கொண்டிருந்தார்கள். இதற்கென அவர்களுக்கென அரச மற்றும் தனியான தொலைக்காட்சிகள் ஊடகங்கள் என்று நிறையவே இருந்தன.

இதனானால்தான் பெரும்பாலான ஊடகக்காரர்கள் கூட இவர்களது அட்டகாசங்களைக் கண்டு கொள்ளவோ பேசவோயில்லை. பல பேரின ஊடத்தாரும் நம்மைப்போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழ் பத்திரிகையாளர்களும்தான் அவர்கள் பற்றிய கதைகளை சொல்லி வந்தோம். மேலும்; அனேகமாக ஊடகங்கள் அவர்கள் பற்றிய விமர்சனங்களைத் தவிர்த்து வந்தன அல்லது தடுத்துக் கொண்டன. அந்த வகையில் நமது கருத்துக்களை எந்தத் தணிக்கைகளுக்கும் உட்படுத்தமால் இன்று வரை பிரசுரம் செய்து வரும் நமது நிருவாகத்தினரையும் குறிப்பாக பத்திரிகை ஆசிரியரையும் நன்றியுடன் நினைவு கூரவேண்டி இருக்கின்றது. இதனால்தான் நமது கடும் கருத்துக்கள் வாசகர்ளைச் சென்றடைந்தது.

போராட்டக்காரர்களின் தியாகங்களை மீண்டும் மீண்டும் நன்றியுடன் நினைவு கூருவதுடன் ஊழலுக்கும் அடாவடித்தனத்துக்கும் டீல் அரசியலுக்கும் பழகிப் போன அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து இந்த நாட்டையும் சமூகத்தையும் மீட்டெடுப்பதற்கான வேலைத திட்டமொன்று வடிவமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்க்கின்றோம். அதே நேரம் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கும் தனிப்பட்ட காலாச்சாரம் பாரம்பரியங்கள் சமூகக் கட்டமைப்புக்கள் என்பனவும் இருக்கின்றன. அதற்கும் உங்கள் வேலைத்திட்டத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம் சிறுபான்மை அரசியலிலும் சந்தர்ப்பவாதிகள் துரேகிகள் டீல்காரர்கள் நிறையவே இருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து சிறுபான்மை சமூகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்.

போராட்ட களத்தில் கட்டியெழுப்பப்பட்ட இன ஐக்கியம் சமூக அரங்கிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவரை உலக நாகரிகத்துக்கு நமது கண்டு பிடிப்புகள் என்று ஏதுவுமே இருக்கவில்லை எனும் குறை ‘கோ ஹோம் கோட்ட’ வரலாற்று நிகழ்வு மூலம் நீக்கப்பட்டிருக்கின்றது என்பது நமது கருத்து. தான்தோன்றித்தனமான ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் எப்படி ஆட்சி மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்ற வரலாற்றக்கு நீங்களே சொந்தக்கார்கள். இந்தப் புத்தகம் எதிர்காலத்தில் உலகில் பல இடங்களில் பரீட்சித்துப் பார்க்க வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றும் நாம் நம்புகின்றோம். அந்த நேரங்களில் உங்கள் நாமங்கள் மீண்டும் மீண்டும் நினைவு கூரப்படும்.

இந்தப் போராட்டத்தில் இதுவரை உயிர்ப் பலிகள் நடாக்கவிட்டாலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு தாக்குதல்களில் காயப்பட்டிருக்கின்றார்கள். அதே நேரம் கோட்டாவின் பொருளாதார நெருக்கடியால் டசன் கணக்கான உயிர்கள் பலியாகியும் இருக்கின்றது. தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத வேதனையில் சில தாய்மார் தமது குழந்தைகளை நீர் நிலையங்களில் தூக்கி வீசிவிட்டுத் தாமும் தற்கொலைக்கு முயன்றிருக்கின்றார்கள். இன்று  கோட்டா நாடு நாடாக ஓடிப் போனாலும் அவரும் அவரது குடும்பத்தினரும் நாட்டுக்கு இழைத்த கொடுமை இன்னும் பல வருடங்களுக்கு இந்த நாட்டில் நீடிக்கும் அதிலிருந்த நாடு முழுமையாக மீண்டெழ இன்னும் ஒரு தசாப்தங்களாக தேவைப்படும். அதற்காக இன்று நமக்குத் தேவைப்படுவது தூய்மையான ஒரு அரசாங்கமும் நேர்மைமிக்க அரச அதிகாரிகளுமாகும்.

மக்கள் பலத்தின் முன் இராணுவம் தலைவணங்கித்தான் ஆக வேண்டும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்தான் இங்கு நிரூபணமாகி இருக்கின்றது. இது உலக நாடுகளுக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களுக்கும் இது நல்லதொரு படிப்பினையாகும்.

நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அதிகாரப் போட்டி துவக்கம்!

Next Story

புதிய ஜனாதிபதி தேர்தல்