நஜீப் சிறைஉறுதி

மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், 68. ஐக்கிய மலாய் தேசிய கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக பதவி வகித்த போது, அரசுக்கு சொந்தமான நிதியத்தில் இருந்து 75 கோடி ரூபாய் பணத்தை சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை எதிர்த்து நஜீப் ரசாக் தரப்பில், மலேஷிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மூன்று நீதிபதிகள் உடைய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நஜீப் ரசாக்குக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து நஜீப் ரசாக் தரப்பு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.எனவே அதுவரை தண்டனைக்கு தடை விதித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘அதுவரை நஜீப் ரசாக் ஜாமினில் இருப்பார்என, தெரிவிக்கப்பட்டது.

Previous Story

அக்குறணையில்  இரு வெடிப்பு!

Next Story

4 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்-ஜப்பான் ஆய்வாளர்