தேர்தல் நடக்கும் நடக்காது!

நஜீப்

கடந்த வியாழக் கிழமை தேர்தல் அதிகாரிகள் கொழும்பு வந்து கூட்டம் போட்டு தற்போது தேர்தலுக்கான மாவட்ட அத்தாட்சி அதிகாரிகளையும் நியமனம் செய்திருக்கின்றார்கள். அது பற்றிய வர்த்மானி வெளியிடப்பட்டாலும். ஏன் வேட்பு மனு அறிப்பு வெளி வந்தாலும் கூட தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் இருக்கின்றது.

இதற்கு முன்னரும் இது போல வேட்பு மனு பெற்றுக் கொண்ட சந்தர்ப்பங்களிலும் தேர்தல் நடக்காத முன்னுதாரணங்கள் நாட்டில் இருக்கின்றன. எனவேதான் தேர்தலை நடத்தா விட்டால் வீதிக்கு வருவோம். நீதிமன்றத்துக்குப் போவோம் என்ற கதைகள் எல்லாம் வருகின்றன.

தேர்தல் விடயத்தில் அரசு புலிவாலைப் பிடித்த நிலையில் இருக்கின்றது. உள்நாட்டு அழுத்தங்கள் எப்படிப் போனாலும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி சர்வதேசம் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றது.

எனவே இந்தத் தேர்தலை சொன்ன படி நடத்தாமல் அதற்கு அரசு நொண்டிக் காரணங்களை முன்வைக்குமாக இருந்தால் அரசாங்கம் சர்வதேசத்திடம் இருந்து கிடைக்கின்ற உதவிகளுக்கு அது ஆப்பாக அமைய நிறையவே இடமிருக்கின்றது.

நன்றி: 25.12.2023 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

'நாய்க்கு பாலியல் துன்புறுத்தல்'  ஜனாதிபதி  ரணில் ஆலோசகர் மீது புகார்

Next Story

US டாலர் கையிருப்பு கரைந்தது: இந்திய ரூபாய் இலங்கைக்கு...?