தேர்தல் நடக்குமா நடக்காதா!

-நஜீப்-

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற 2023 உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற ஆதங்கம் நாடுபூராவிலும் பரவலாக இருந்து வருகின்றது.

ஆனால் ரணில்-ராஜபக்ஸ ஆதரவாலர்கள் மக்கள் தேர்தலைக் கோட்கவில்லை. வங்குரோத்து அரசியல்வாதிகள்தான் தேர்தல் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டமூலம் நடாளுமன்றத்தில் 97க்கு36 என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இதற்கு சபாநாயகர் கையொப்பம் இட்டதும் இது சட்டமாகிவிடும். இது ஒரு புதிய சட்டம் அல்ல. 1946 முதல் 1977வரை நாட்டில் அமுலில் இருந்தது. ஜேஆர். பதவியேற்றதில் இருந்துதான் இது கைவிடப்பட்டது.

எனவே யாராவது ஒருவர் நாட்டில் இப்படி ஒரு சட்டம் இருக்கின்ற போது வேட்பாளர்கள் தமது தேர்தல் செலவுகள் பற்றி தகவல்களை அறிவிக்க வேண்டும் என நீதி மன்றத்துக்குப் போனால் அறிவிக்கப்பட்டிருக்கின்ற 2023 தேர்தலுக்கு ஆப்புத்தான் என்பது நமது கருத்து.

ஆனால் நீதி அமைச்சர் விஜேயதாசாவோ திரும்பத் திரும்ப இது இந்தத் தேர்தலுக்கு செல்லுபடியாகாது என்று கூறிக் கொண்டிருக்கின்றார். வருகின்ற நாட்களில் என்ன நடக்கின்றது என்பதனைப் பார்ப்போம்.!

நன்றி: 22.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தேர்தலை ஒத்தி வைக்க முடியும்- தேசப்பிரிய

Next Story

போதை வர்த்தகர் வீட்டிலிருந்து மீட்க்கப் பட்ட அஸ்ஹர், அர்ஷாத் உடல்கள்!