தேசிய பட்டியல் கலாட்டா!

 -நஜீப்-

நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல்

Parliament of Sri Lanka - Wikipedia

கடந்த 2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய பட்டியலில் வந்த டயானா ஒரு சர்ச்சைக்குரிய நபரானார். அவரது பெயரில்தான் அந்தக் கட்சி பதிவாகி இருந்தது. தமக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது போல தேசிய பட்டியல் கிடைக்கவில்லை என்றும் பல கூட்டணிகள் முறிந்திருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் சஜித் கூட்டணியினர் தமது தேசியப் பட்டியலைப் பூர்த்தி செய்திருக்கின்றனர். பதவியை எதிர்பார்த்த ஜீ.எல் டலஸ் இம்டியாஸ் திஸ்ஸ ஹிருணிகா என்பேருக்குப் பெரும் ஏமாற்றம்தான்.

இந்த நாடாளுமன்றத்தில் ரணில் அணிக்குக் கிடைத்த இரு தேசியப் பட்டியல் ஆசனங்களும் கூட்டணிகளின் விருப்பத்துக்கு மாற்றமாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அங்கே ஒரு கலாட்டா நடந்து கொண்டிருக்கின்றது.

கட்சி செயலாளர் சர்மில பெரேரே முதலில் தனது சகா ரவியையும் இப்போது பைசர் முஸ்தபவையும் நியமனம் செய்திருக்கின்றார். இதன் பின்னணியில் பெரும் கொடுக்கல்வாங்கள் என்றும் கதை.

அடுத்து வஜிர  சிரிபால சாகல காஞ்சன ஆகியோரில் எவராவது உள்ளே வந்தால் தமக்கு அவர்கள் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பதால் சிறுபான்மையினரான பைசர் முஸ்தபா நியமனம் நடந்திருக்கின்றார் என்றும் ஒரு கதை.

Previous Story

சஜித் கூட்டணியில் பிளவு!

Next Story

ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்