துருக்கியின் அதிரடி ஆட்டம்!

-யூசுப் என் யூனுஸ்-

Turkey dubs 5th gen fighter 'KAAN,' sees other domestic aircraft milestones - Breaking Defense

இன்று உலகில் மிகவும் சக்திவாய்த ஒரு ஆயுதமாக ஐந்தாம் தலைமுறை விமானங்கள் திகழ்கின்றன. இன்று உலகில் மூன்றே மூன்று நாடுகள் மட்டும் இந்த ஆயுதத்தை தன்வசம் வைத்திருக்கின்றன. அவை அமெரிக்கா, ரஸ்யா, மற்றும் சீனா. ஒலியைவிட பல மடங்கு வேகத்தில் பறந்து சென்று எதிரிகளின் கண்களில் படாமல் இலக்குகளைத் தாக்கவல்ல விமானம்தான் இந்த ஐந்தாம் தலைமுறை விமானங்கள் என்பது.

தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இந்த விமானத்தை தயாரித்து சாதனை படைத்திருக்கின்றது துருக்கி. 2028ல் தான் துருக்கி இப்படி ஒரு விமானத்தை தயாரிப்பதாக திட்டமிட்டிருந்தது.

The King of Kings: Kaan is the name of Turkey's first fighter jet - Air  Data News

ஆனால் அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னதாக இதனை தயாரித்து அசத்தி இருக்கின்றது துருக்கி. ‘கான்’ (KAAN) என்ற  பெயரில் இந்த விமானங்கள் வருகின்ற 2023 திசம்பரில் துருக்கிய விமானப்படையில் இணைந்து கொள்ள இருப்பதாக இராணுவ ஆய்வாலர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான ஒரு முயற்சியில் இதற்கு முன்னர் இந்தியா இறங்கி இருந்தாலும் அது இன்றுவரை கைகூடவில்லை. இந்த துருக்கியின் ‘கான்’ ஐந்தாம் தலைமுறை போர் விமானம் அதன் நட்பு நாடுகளான பாகிஸ்தான் மற்றும் அஸர்பைஜானுக்கும் கைமாற இடமிருக்கின்றது.

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தேர்தலில் ஜொனிக்கு படுதேல்வி!

Next Story

ஹக்கீம் தேவைகள்தான் என்ன!