துருக்கியால் இஸ்ரேலுக்கு புதிய பிரச்சனை

மொத்த வர்த்தகமும் முடக்கம் 

விமானங்கள் பறக்க தடை !

இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இஸ்ரேலின் போர் விமானங்கள் துருக்கியின் வான்வெளி பரப்பு மற்றும் துறைமுகங்களை பயன்படுத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை தான் முக்கிய காரணமாகும். பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தொடக்கத்தில் இருந்தே துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் இஸ்ரேலை கடுமையாக கண்டித்தார். அதுமட்டுமின்றி காசாவில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்வதாக சாடினார். ஆனால் இஸ்ரேல் எதையும் கண்டுக்கொள்ளவில்லை.

காசாவிற்காக துருக்கி சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட மருத்துவமனையை குண்டு வீசி அழித்தது. இது துருக்கியை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. அதோடு இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று துருக்கி கேட்டது.

இருப்பினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துவிட்டார். இந்நிலையில், தான் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் துருக்கி சார்பில் அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துருக்கி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகன் ஃபிடன் கூறியதாவது: நாற்காலிக்காக நடக்கும் நரபலி.. காசா போரை கடைசி நிமிடத்தில் நெதன்யாகு நிறுத்தாமல் பின்வாங்கிய பின்னணி ‛‛மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் முழு பிராந்தியமும் மோதலில் மூழ்க கூடும். இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் உடனான வர்த்தகம் மற்றும் அனைத்து பொருளாதார தொடர்புடைகளும் துண்டித்துள்ளோம்.

இஸ்ரேலின் விமானங்கள் துருக்கி வான்வெளி பரப்பை பயன்படுத்தவும், இஸ்ரேல் கப்பல்கள் துருக்கியின் துறைமுகத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துருக்கி கப்பல்கள் இஸ்ரேல் துறைமுகத்துக்கு செல்லாது” என்றார்.

Previous Story

ஜம்மியதுல் உலமாவின்  புதிய நிர்வாகிகள் (30) விபரம்

Next Story

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு