துண்டு விழும் தொகையை ஈடுசெய்ய கொள்ளையிட்ட பணத்தை கொண்டு வர வேண்டும்:ஓமல்பே சோபித தேரர்

கொள்ளையிடப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதே வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்கான பொருத்தமான செயல் என கலாநிதி  ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய போதிராஜ தர்ம நிறுவனத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு போதும் திருடர்களை பிடிக்க மாட்டார்கள்

ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச -Ranil Wickremesinghe and Mahinda Rajapaksa

நாட்டின் திருடர்களை பிடிக்கும் பொறுப்பை திருடர்களை ஏற்றுக்கொண்டுள்ளதால், ஒருபோதும் திருடர்கள் பிடிக்கப்படுவது நடக்காது. திருடர்களை பிடிக்கவே மக்கள் தலைவர்களை தெரிவு செய்கின்றனர்.

எனினும் தற்போது அதிகாரத்தை பெற்றுக்கொண்டு திருடர்களை பாதுகாக்கின்றனர். இவர்களில் எவர் மூலமும் தேசிய பொறுப்பு நிறைவேற்றப்பட மாட்டாது.

திருடர்களை பிடிக்க சர்வதேச ஆணைக்குழுவை நியமிகக் வேண்டும்

நாட்டின் அரசியல்வாதிகள் திருடியதை கண்டுபிடிக்க சர்வதேச ஆணைக்குழு நியமிக்க வேண்டும். இந்த அரசியல் கொள்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

கோட்டாவுக்கு 8 அடுக்கு பாதுகாப்பு !

Next Story

புத்தளம்: நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த இளம் தாய்