தீர்க்கமான வரவு செலவு!

-நஜீப்-

2024ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்துக்கு ஒரு தீர்க்கமான ஒன்றாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. இதனை ஆளும் தரப்பில் இருக்கின்ற மொட்டுக் கட்சியினர் சிலர் தமக்குள்ள இறுதி வாய்ப்பாகவும் பாவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

மூழ்கின்ற கப்பலில் இருந்து தப்பித்துக் கொள்ள இதனை  பாவிக்க ஆளும் தரப்பில் உள்ள பலர் முடிவெடுத்து 2024க் கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்ற போது எதிரணியுடன் இணைந்து அரசாங்கத்தை தோற்கடிக்கும் ஒரு முயற்சிதான் இது.

ஆளும் தரப்பிலிருந்து ஏற்கெனவே வெளியேறி இருக்கும் பலர் இந்த ஏற்பாடுகளில் இறங்கி இருக்கின்றனர். டலஸ் அலகப்பெருமாவின் அணிதான் இதில் முனைப்புடன் காய் நகர்த்திக் வருகின்றது. இதுவரை பதவிகள் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுவோர் அரசுக்கு முதுகில் குத்த அதிக வாய்ப்புக்கள் இருகின்றது.

இன்னும் பலருக்கு கொடுக்கப்பட்ட தகவல்களுக்கு பலர் சாதகமான பதில்களைக் கொடுத்திருப்பதாகவும் தெரிகின்றது.

நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இது இரும்புப் பெண் சிபாயா ரசீடின் கதை

Next Story

தாய்லாந்து அரசியலில் முறுகல்.!