இந்த உள்ளூராட்சி தேர்தலில் அகுரண பிரதேச சபை என்பிபி. முதன்மை வேட்பாளர் அல்லது தவிசாளர் தாரிக் அலிதான். அதில் மாற்று ஏற்பாடுகள் கிடையாது. இதனை ஜனாதிபதி அனுர மற்றும் கண்டி மாவட்ட என்பிபி. தலைவர் லால்காந்தா உறுதி செய்திருகின்றார்கள்.
அகுரண பிரதேச சபைக்கு 17 வட்டாரங்கள் அதில் அலவதுகொட இரட்டை வட்டாரம். இதில் ஏழு வட்டாரங்களில் சிங்கள் வாக்காளர்கள் பெரும்பான்மை. அங்கு என்பிபி பலமாக இருக்கின்றது. 10 வட்டாரங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மை. அங்கு SJB செல்வாக்கு சற்று மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
குறைந்தது இந்த 10 வட்டாரங்களில் 3 அல்லது 4 ஐ NPP. வெற்றி கொண்டால் அது அகுரண முஸ்லிம்களுக்குக் கௌரவமாக இருக்கும்.
அவர்கள் அனைத்திலும் தோற்றுப் போனாலும் கட்சிக்குக் கிடைக்கின்ற வாக்குகளுக்கு வரும் ஆசனங்களினால் கூட களம் NPP க்கு சாதகமாக அமையலாம்.
ஆனால் இது அகுரணை சமூகத்துக்கு ஒரு தலைகுனிவைத்தான் கொடுக்கும். அகுரண நாடாளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக்குக் கூட இது தனிப்பட்ட ரீதியில் அவமானமாக இருக்கும்.
இது தவிர கட்சிக்குக் கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் கூட சில்லறைகளுக்கும் அதிஸ்ட வசமாக ஓரிரு ஆசனங்கள் வரலாம். எப்படியும் அங்கு ஒரு நெருக்கமான போட்டி முஸ்லிம் வட்டாரங்களில் தெரிகின்றது.
அரசியல் எதிரிகள் NPP வெற்றி பெற்றாலும் அகுரணைக்கு ஒரு சிங்களவர்தான் தவிசாளராக நியமனம் செய்யும் என்று இன்று நயவஞ்சகமாக பரப்புரை செய்து வருகின்றனர்.
நாம் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டபோது எம்மிடம் கூட இதே கருத்தை சிலர் முன்வைத்தனர்.
அகுரணை என்பிபி.யின் பபரப்புரை வியூகங்கள் நமக்குத் திருப்தி கொள்ளும் நிலையில் இருக்கவில்லை என்பதனை இங்கு சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கின்றது.





