தாய்லாந்து அரசியலில் முறுகல்.!

-யூசுப் என் யூனுஸ்-

கடந்த வாரம் தாயிலாந்தில் நடந்த தேர்தலில் இளவயதுக்காரான பெடலிஞ்சாரோ என்பவர் கட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. இவரிடம் ஆட்சி அதிகாரத்தை முறைப்படி கையேற்பதில் தற்போது அரசியல் ரீதியான நெருக்கடி நிலை ஒன்று தோன்றி இருக்கின்றது.

இராணுவ ஆதரவு பின் புலத்தைக் கொண்ட பழைமைவாதக் கட்சிகள் இந்தத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டன. இதனை இராணுவத் தரப்பினருக்குச் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே வெற்றி பெற்ற பெடலிஞ்சாரோவைப் பிரதமராக்குவதுக்கு பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன.

Thai Election Results Spell Danger for Junta and Monarchy

பழைமைவாதக் கட்சியினர் மன்னருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஆதரிக்கின்றன. வெற்றி பெற்றிருக்கும் சீர்சிருத்தவாதிகள் இதற்குக் குந்தகம் விளைவித்துவிடுவார்கள் என்று பழைமைவாதிகளும் இரணுவமும் அஞ்சுகின்றன.  இராணுவம்தான் அங்கு பழைமைவாதிகளுக்கும் இராணுவத்துக்கும் ஏற்றவாறு ஒரு அரசியல் யாப்பை உருவாக்கி இருக்கின்றார்கள்.

அதன் படி செனட் சபையில் இருக்கின்ற 249 பேரிடையே நடக்கின்ற வாக்கெடுப்பில்  வெற்றி பெற்றவர் பிரதமருக்கான அங்கிகாரத்தைப் பெற வேண்டும். இதற்காக நடந்த வாக்கெடுப்பில் சீர்திருத்தவாதிகள் தரப்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட பெடலிஞ்சாரோவுக்கு செனடின் அங்கிகாரம் முதல் சுற்றில் கிடைக்கவில்லை. இதனால் தாய்லாந்து அரசியலில் கொதிநிலை.

நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தீர்க்கமான வரவு செலவு!

Next Story

ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயத்தில் என்னதான் நடக்கும்!