தயாசிரி வைக்கும் ஒப்பாரி!

நன்றி: 05.07.2026 ஞாயிறு தினக்குரல் 

நஜீப்

கொள்கை கோட்பாடுகளைப் பார்க்காதீர்கள் இனவாதம் மாதவாதங்களை கணக்கில் எடுக்காதீர்கள் நல்லவன் கெட்டவன் கள்வன் காவாளி என்றெல்லாம் ஒதுக்க வேண்டாம்.கொள்கைகள் ஏதுவுமே இல்லாவிட்டாலும் கண்டு கொள்ளாமல் நாங்கள் அனைவரும் முதலில் ஒரு அணியாக இணைய வேண்டும்.

இல்லாவிட்டால் நமக்கு அழிவுதான். இப்படி ஒப்பாரி வைக்கின்றார் ஐமச.சக்தி நடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி. நிதி மோசடி தொடர்பில் தனக்கு எதிராக தற்போது மூன்று குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் தான் விரைவில் கம்பி எண்ண வேண்டி இருக்கின்றது என்பதனை நன்கு உணர்ந்திருப்பதால் அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்.

இது போன்ற குற்றச்சாட்டுக்கள் இருப்போர் கைதாகி இப்போது நீதி மன்ற விசாரணைகளை எதிர் நோக்கி வருவதால் தனக்கு ஏற்படுகின்ற அச்சம் காரணமாகத்தான் மனிதன் இப்படி ஒப்பாறி வைத்துக் கொண்டு திரிகின்றார் என்று ஆளும் தரப்பினர் தயாவை கிண்டலடிக்கின்றார்கள்.

 

Previous Story

“පික්මී රියදුරුගේ ලැප්ටොප් එක හරහා ඕලුගල සර් තට්ටයා අල්ලන්න දැල එලූ හැටි ශ්‍යාමාගේ අයියා කියයි”

Next Story

පාස්කු නඩුවෙදි වෙච්ච හමුදා පදක්කම් කතාවේ ඇත්ත නැත්ත