தமிழக தேர்தலும் ஈழத் தமிழரும்!

நஜீப்

நன்றி: 29.03.2026 ஞாயிறு தினக்குரல் 

தற்போது தமிழகத்தில் தேர்தல் களம் என்றுமில்லாத அளவில் சூடு பறக்கின்றது. கூட்டணிகளும் தொகுதிப் பகிர்வுகளும் முடிந்து விட்டன. அங்கு இந்த முறை கடுமையான முக்கோணப் போட்டி என்று தெரிகின்றது.

இங்கு வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலும் தமிழகத் தேர்தல் தொடர்பில் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களையும் பிரபாகரனையும் வைத்துத்தான் அங்கு தேர்தல் மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இன்று ஈழத்தமிழர் பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை. நாம் தமிழர் சீமான் மட்டும் சோற்றுக்கு போடும் உப்புப்போல கொஞ்சம் சேர்த்துக் கொள்கின்றார் அவ்வளவுதான்.!

அவரது அணி அங்கு நான்காம் இடத்தில் இருப்பதால் அதன் தாக்கம் பெரிதாக எடுபடும் நிலையில் இல்லை என்பது நமது கணிப்பு.!

புதிய வரவு தேர்தலில் கனிசமான தாக்கங்களைச் செலுத்தக் கூடும். வாய்ப்பில்லாவிட்டாலும் இது கெடுத்துவிடு பலம் என்று நாம் நம்புகின்றோம். கமலுக்கு சிங்கல் சீட்டுக் கூட கிடையாது.!

Previous Story

பூவா தலையா!

Next Story

இஸ்ரேலுக்கு 96 லட்சம் கோடி இழப்பு… ஷாக்கான அமெரிக்கா