தப்புக் கணக்கால் ஏமாற்றம்!

நஜீப்

ரணிலுக்கும் டலஸூக்கும் இடையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்-டலஸ் அணி பார்த்த கணக்குப் பற்றித்தான் இங்கு நாம் பேசப் போகின்றோம்.

இதில் அணுர குமாரவை நாங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் கொள்கை ரீதியிலும் பிரச்சார நோக்கிலும் களத்துக்கு வந்தார்கள் என்பது நமது கருத்து.

டலஸ் ஜனாதிபதி சஜித் பிரதமர் என்று பார்க்கப்பட்ட கணக்கு இது. அதன் படி சஜீத் தலமையிலான எதிரணி 50 வாக்குகள். கூட்டணி 13 வாக்குகள். விமல் வாசு கம்மன் பில தரப்பு 14. சு.கட்சி 9 வாக்குகள். மொட்டுத் தரப்பில் டலஸ் விசுவாசிகள் 30 வரை, மனச் சாட்சிப்படி இன்னும் பலர் மக்கள் பக்கத்தில் இருந்து தமக்கு வாக்குப் பண்ணலாம் என்ற எதிர்பார்ப்பும் இவர்களுக்கு இருந்தது. எனவே குறைந்தது 120 வாக்குகள் கிடைக்கும் என்று நம்பினார்கள்.

இதற்கு சில தினங்களுக்கு முன்னர் உதவி சபாநாயகர் பதவிக்குப் போட்டி போட்ட சஜித் அணி வேட்பாளர் ரோஹினி கவிரத்தன தனித்து 72 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதும் தெரிந்ததே.

இங்கு பணம் என்றதும் பிணங்கள் ரணிலுக்குப் புள்ளடி  போட்டு விட்டது போலும்.! நன்றி:24.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூவின் கிராம  - கள நிலவரம்

Next Story

தேவையற்ற பலம் பிரயோகம்- ஐ.நா மனித உரிமைகள்