தப்ப தடை கோரி வழக்கு! 

இலங்கை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோத்தபாய ராஜபக்சே, அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயற்சி மேற்கொண்டதாகவும் அது தோல்வி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல தடைவிதிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார பேரழிவால் ஒட்டுமொத்த நாடும் முடங்கிப் போயுள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நிலைமையை மேம்படுத்தக் கோரி கடந்த சில மாதங்களாக தொடர் கிளர்ச்சிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்களின் கிளர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார். அவர் பொதுமக்களால் தாக்கப்படலாம் என அஞ்சி ராணுவத்திடம்  தஞ்சமடைந்தார்.

பொதுமக்களின் கொந்தளிப்பும் கோபமும் ஓயவில்லை. இதன் உக்கிரமாகத்தான் கடந்த 9-ந் தேதி இலங்கை ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டது. ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் கைப்பற்றியதால் உயிர் தப்பி ஓடினார்

கோத்தபாய ராஜபக்சே. இதன்பின்னர் கோத்தபாய ராஜபக்சேவும் இடைக்கால பிரதமர் ரணிலும் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். பசில் தப்ப முயற்சி இந்நிலையில் இன்று காலை முதல் கோத்தபாய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓட மேற்கொண்டது தொடர்பான தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

இன்று அதிகாலையில் கொழும்பு விமான நிலையம் வழியாக பசில் ராஜபக்சே தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்களும் அதிகாரிகளும் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பசில் ராஜபக்சேவால் தப்பி ஓட முடியவில்லை.

கோத்தபாயவுக்கு விசா மறுப்பு இதேபோல் கோத்தபாய ராஜபக்சேவும் அமெரிக்கா அல்லது இந்தியாவுக்கு தப்பி ஓட திட்டமிட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு செல்ல அவசர விசா கோரியிருந்தாராம் கோத்தபாய ராஜபக்சே. ஏற்கனவே அமெரிக்காவின் குடியுரிமையையும் கோத்தபாய ராஜபக்சே வைத்திருந்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்கா குடியுரிமையை ரத்து செய்தார் கோத்தபாய. தற்போது தமக்கு விசா வழங்க வேண்டும் என கோத்தபாய விடுத்த வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்துவிட்டதாம். இந்தியா செல்ல திட்டமா? மேலும் இந்தியாவின் தென் மாநிலம் ஒன்றுக்கு தப்பிச் செல்லவும் கோத்தபாய ராஜபக்சே முயன்றார் எனவும் கூறப்படுகிறது.

தம்முடன் குடும்பத்தினர் 15 பேரையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தாராம் கோத்தபாய. ஆனால் கோத்தபாய கூட்டத்துக்கு இந்திய அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது என்கின்றன சில ஊடக தகவல்கள்.

பயண தடை கோரி வழக்கு இதனிடையே முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதற்கு எதிராக பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவர்களது பாஸ்போர்ட்டுகளை முடக்கி பயணத் தடை விதிக்க வலியுறுத்தி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Previous Story

கடல் வழியாகத் தப்பி ஓட ஏற்பாடு

Next Story

சங்கா ஜனாதிபதி !