தங்க மகளைப் பெற்றவர்கள்!

நஜீப்

05.10.2025 நன்றி ஞாயிறு தினக்குரல்

சில நிஜக் கதைகள் கற்பனைக் கதைகளையும் விஞ்சியவை என்பதை நாம் அறிவோம். அதற்கு ஒரு நல்ல உதாரணம் ஊடகவியலாளர் சுரங்க சேனநாயக்காவின் ‘தங்க மகள்’.!

கதையின் பின்னணி மிகவும் உணர்வுபூர்வமானது. இதனை உலகே அறியும். அரசியல் வியாபாரிகளே ஈஸ்டர் தாக்குதல் காலப்பின்னணியை ஒருகனம் இன்றைய நாட்களுடன் ஒத்துப் பாருங்கள்.!

அதில் இருந்த பயங்கரம் இனவெறி அபாண்டம் அடக்குமுறை இரத்தவெறி என்பவற்றை நீங்கள் மறந்து விட்டீர்களா? இத்தனையும் கதிரைக்கு வந்து குடிகளைச் சுராண்டப் போட்ட திட்டம்தானே.!

நடந்தது என்ன? நாம் முகப்பில் பதிந்தது போல இது கடவுளே வழக்கு விசாரிக்கின்ற நாட்கள் போலும்…! நிகழ்வில் டாக்டர் சாபி இனவாதிகளுக்கு சம்மட்டியால் லாவகமாக சாத்தவும் தயங்கவில்லை.

நூல் ஆசிரியர் சுரங்க டாக்டர் சாபி மகள் செய்னம்ப் (டாக்டர்) உணர்வுகளையும் மனவலிமையையும் நமது இளசுகளுக்கு நல்ல படிப்பினையாக போதிப்பதில் சாதித்திருக்கின்றார்.

குடிகள் கூடிவாழத் தயாராக இருந்தாலும் துரோகிகள் இன்றும் குறுக்காகத்தான் வருவதாகத் தெரிகின்றது.

 

Previous Story

விவாகரத்து பெற்ற மனைவி குறுக்கு வழியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்...

Next Story

මෙහෙම සෙනඟ අස්සට යාම ජනාධිපති අනුර කුමාරගෙ ආරක්ෂාවට තර්ජනයක් නොවෙයිද