ட்ரம்பின் உண்மையான ‘பொண்ணு’ நான்தான்- பாகிஸ்தான் இளம்பெண்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான் தன்னுடைய தந்தை என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வாகியுள்ள நிலையில், தேர்தல் வெற்றி எப்படி சாத்தியமானது? வெற்றிக்காக இவர் வகுத்த வியூகங்கள் என்ன? கமலாவை தோற்கடிக்க எந்த மாதிரியான யுக்தியை கையில் எடுத்தார்? என்கிற கேள்விகளின் மீது விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கான விவாதம் ஒன்று பாகிஸ்தானில் வெடித்து கிளம்பியிருக்கிறது. இளம்பெண் ஒருவர், தன்னை ட்ரம்பின் உண்மையான மகள் என்று கோரியதே இதற்கு காரணம்.

donald trump pakistan

 

 

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் இளம்பெண், செய்தியாளர்களுக்கு இது குறித்து பேட்டி அளித்திருக்கிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

வீடியோவில், “எனது தந்தை ட்ரம்ப் மிகவும் கடினமானவர். என்னை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்று, தாய் இவானாவை அவர் எப்போதும் கடிந்துக்கொண்டே இருப்பார். இவானா மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய். என் மகளை உன்னால் கவனிக்க முடியாது என்றும் திட்டிக்கொண்டிருப்பார்.

வெளி நாட்டினர் இங்கு வந்து என்னை பார்த்துவிட்டு போகிறார்கள். நான் இங்கு என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என ஆதங்கப்படுகிறார்கள். நான் எனது தந்தையை சந்திக்க அமெரிக்கா செல்ல இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ குறித்து ஏராளமான கருத்துக்கள் வந்திருக்கின்றன.

பிரபலமானவர்கள் குறித்து அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான் என்று வீடியோ குறித்து பலர் கமென்ட் தெரிவித்திருக்கிறார்கள். இத்தனை நாட்கள் இல்லாமல், ஏன் ட்ரம்ப் ஜெயித்த அன்றைக்கு மட்டும் திடீரென அந்த பெண் தன்னுடைய தந்தை ட்ரம்ப் என கூற வேண்டும்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இளம்பெண் இப்படி சொல்வதற்கு அடிப்படையாக எந்த ஆதாரமும் கிடையாது. போகிற போக்கில் கதையை சொல்லிவிட்டு போகிறார் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

Pakistani Girl Claims to be Donald Trump's Daughter in Viral Video

மட்டுமல்லாது இதெல்லாம் காசு பிடுங்கும் வேலை என்றும், பாகிஸ்தானில் இப்படி அடிக்கடி நடக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர். நம்மூரில் பிரபல நடிகரை குறிப்பிட்டு, அவரின் உண்மையான பெற்றோர்கள் நாங்கள்தான் என்று வயதான இருவர் சொந்தம் கொண்டாடினர்.

ஆனால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால், இந்த உரிமை கோரலில் உண்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டது. அதே பாணியில் தற்போது பாகிஸ்தானில் சிலர் கிளம்பியிருக்கிறார்கள் என்றும் சோஷியல் மீடியாவில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Pakistani Girl Claims to be Donald Trump's Daughter, BUT IS IT TRUE?

ட்ரம்ப்பின் முதல் மனைவி இவானா, செக் குடியரை சேர்ந்த பிரபல மாடல் அழகியாவார். இவர்கள் இருவருக்கும் 1977ல் திருமணம் நடந்தது. ஆனால், 1990லேயே இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் என மூன்று குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

லொஹான் ரத்வத்த,மனைவிக்கும் நீதிமன்றம் உத்தரவு

Next Story

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மீண்டும் அரியணை ஏறுவாரா? டிரம்ப் வெற்றியால் மாறும் அரசியல்!