டைடானிக் கதை 2  ஆரம்பம்!

-யூசுப் என் யூனுஸ்-

டைடானிக் கப்பல் பற்றி சமகாலத்தில் வாழ்கின்ற தலைமுறையினருக்குத் தெரியுமோ தெரியாதோ சொல்லத் தெரியாது. ஆனால் அந்தக் கதையை கருவாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றி இந்தத் தலைமுறைக்கு நன்றாகத் தெரியும். அதற்கு விருதுகள் பலவும் கிடைத்திருக்கின்றன. 1912ல் டைடானிக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை துவங்கியது.

அப்போது அதில் 2223 பேர் பயணித்திருக்கின்றார்கள். கப்பலின் நீளம் 882 அடி. அந்தக் கப்பலைச் செலுத்திய சிரேஸ்ட கப்டன் எட்வர்ட் சுமித்தின்; கடைசிப் பயணமாகவும் அது அமைய இருந்தது. காரணம் அந்த கப்பல் மீண்டும் திரும்பி துறை முகத்திற்கு வருகின்ற நாளில் அவர் ஓய்வு பெறுவதாகவும் இருந்தது.

Titan submersible: What's next in the investigation and recovery - pennlive.com

பனிப்பறையில் மோதி 14.04.1912ல் அத்திலாந்திக் சமூத்திரத்தில் அது கவிழ்ந்தது. பயணிகளில் 1517 பேர் இறந்தார்கள். 706 பேர் உயிர் தப்பினர்கள். இந்தக் கப்பல் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் அதனை போய் பார்க்கின்ற ஒரு வழக்கம் இருந்து வருகின்றது.

அதற்கெனவே ‘ஓசன் கேட்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலும் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. பெரும் பணச் செலவு மிக்க அந்தப் பயணத்தில் செல்வந்தர்கள்தான் ஈடுபட்டிருந்தனர். கடைசியாக பாகிஸ்தானைச் சேர்ந்த கோடிஸ்வரர் சாஷhதா தவூத் அவர் மகன் என ஐந்து பேர் இதில்  போய் இருக்கின்றார்கள்.  அனேகமாக அவர்கள் கதை முடிந்தது. இப்போது அவர்களைத் தேடும் படலம் தொடர்கின்றது. அதுவும் கூடப் படமாகலாம்.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

“போராடித்தான் தேர்தலைப் பெறவேண்டும்”

Next Story

இந்தியா முஸ்லிம்கள் உரிமை குறித்து பேசிய ஒபாமா; நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வி