தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்!
வான்டடாக வந்த கொலம்பிய அதிபர்
வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்திருந்தது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டிரம்ப் ஒரு கோழை என்றும், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்றும் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறியிருக்கிறார்.
குஸ்டாவோ, இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. போதை பொருள் விஷயத்தில் வெனிசுலாவை மட்டுமல்ல கொலம்பியாவையும் டிரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார். கனவு கூட்டணியை கணியுங்கள்! என்ன சொன்னார் அதிபர்? “கொகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்க விரும்பும் நோயாளி மனிதனால் இயக்கப்படும், மிகவும் மோசமான நாடுதான் கொலம்பியா” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
“கொலம்பிய அதிபருக்கு சொந்தமாக கொகைன் ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன, அதெல்லாம் வெகுநாட்களுக்கு நீடிக்காது. கொலம்பியா மீதும் ராணுவத் தலையீடு சாத்தியமா என கேட்கிறார்கள். அப்படி தலையிட்டால் நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் பலரைக் கொல்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.
டிரம்பின் குற்றச்சாட்டு டிரம்பின் குற்றச்சாட்டுகளை கொலம்பியா மறுத்தது. குஸ்டாவோ இது குறித்து கூறுகையில், “எனது பெயர் நீதிமன்றப் பதிவேடுகளில் இடம்பெறவில்லை. நான் எந்த வழக்கிலும் சிக்கவில்லை. டிரம்ப், என்னை அவதூறு செய்வதை நிறுத்துங்கள். ஆயுதப் போராட்டம், பின்னர் கொலம்பிய மக்களின் அமைதிப் போராட்டத்தின் மூலம் உருவான ஒரு லத்தீன் அமெரிக்க ஜனாதிபதியை இப்படி அச்சுறுத்தக்கூடாது” என்று கறாராக கூறியிருந்தார்.
“மதுரோவை சட்டவிரோதமாக கடத்தியிருக்கிறீர்கள். இருப்பினும் இதற்கு எதிராக வெனிசுலா அமைதி காத்திருக்கிறது. டிரம்பின் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடு. நான் யாருக்காகவும் பயப்படவில்லை. என்னை கைது செய்ய விரும்புகிறீர்கள் எனில், வாருங்கள். இங்கு உங்களுக்காக நான் காத்திருப்பேன்.
ஆயுதம் ஏந்துவேன் இந்த நடவடிக்கையின்போது படையெடுப்புகளையோ, படுகொலையோ, ஏவுகணை தாக்குதலோ வேண்டாம். ஆனால் உளவுத்துறையின் நடவடிக்கையை நான் ஏற்கிறேன். உளவுத்துறையுடன் வாருங்கள். நேருக்கு நேர் மோதி பார்ப்போம். இதெல்லாம் செய்யாமல் அரசியல் மாஃபியாக்களால் கொலம்பிய மக்களை ஏமாற்றாதீர்கள். ஏற்கெனவே 7 லட்சம் கொலம்பிய மக்களை கொன்று குவித்திருக்கிறீர்கள்.
எனவே நான் ஆயுதங்களை தொட மாட்டேன் என்று உறுதி ஏற்றிருக்கிறேன். ஆனால் தாய் நாட்டுக்காக மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டேன்” என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்க தடை கொலம்பியாவும் அமெரிக்காவும் பிராந்தியத்தில் முக்கிய இராணுவ மற்றும் பொருளாதார கூட்டாளிகள் என்றாலும், இரு நாடுகளின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் தொடங்கியதிலிருந்து, சுங்கவரிகள், குடியேற்றக் கொள்கை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் இரு நாட்டு தலைவர்களும் மோதி வருகின்றனர். போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் கொலம்பிய ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமெரிக்கா தடைகளையும் விதித்துள்ளது.





