டிரம்பின் தடையை மீறி.. ஈரான் செய்த சம்பவம்!

 டம்மி பீஸ் ஆன அமெரிக்க கடற்படை!

ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். எனவே, ஈரான் நோக்கி எந்த கப்பலும் போக முடியாது, அங்கிருந்து எந்த கப்பலும் வர முடியாது என்று சொல்லியிருந்தார்.

ஆனால். ஈரானின் பெரிய எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று ஹார்முஸ் நீரிணையை கடந்து, ஈரானின் இமாம் கோமேனி துறைமுகத்தை நோக்கிச் சென்றுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய பலவீனத்தை காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது. என்னப்பா நீ, நான்தான் எல்லாம்னு சொன்ன.. இப்போது உன்னுடைய கடற்படையை மீறி, ஈரான் கப்பல் போயிருக்கு என்று சர்வதேச அளவில் டிரம்பை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டிரம்பின் மிரட்டல் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கி, திக்குமுக்காட செய்ய வேண்டும் என்பது டிரம்பின் பிளான். இந்த திட்டத்திற்காகதான் ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டில் எடுப்பதாகவும், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

முற்றுகை எனில், ஹார்முஸ் நீரிணையை தாண்டி எந்த கப்பலும் ஈரானுக்கு போகவும், ஈரானை விட்டு வெளியேயும் வர முடியாது. அப்படி மீறி போனால்.. குறிப்பாக ஈரான் கப்பல்கள் போனால் குண்டு போட்டு அழிப்பேன் என்று வீர வசனம் பேசியருந்தார் டிரம்ப்.

தண்ணீ காட்டி ஈரான் எல்லாம் ஓகேதான், ஆனால் டிரம்ப் இப்படி பேசிய அடுத்த நாள் முதல் கப்பல்கள் ரொம்ப சாதாரணமாக நீரிணையை கடந்து போகவும், அங்கிருந்து வெளியே வரவும் செய்தன. குறிப்பாக சீன கப்பல் ‘Rich Starry’ ரொம்பவும் அசால்ட்டாக நீரிணையை கடந்து வந்தது.

இதனை அல்ஜசீரா செய்தி ஊடகமும் உறுதி செய்திருந்தது. தற்போது ஈரானின் சூப்பர் டேங்கர் எண்ணெய் கப்பல் ஒன்று, நீரிணையை கடந்து, ஈரானின் இமாம் கோமேனி துறைமுகத்தை நோக்கிச் சென்றுள்ளதாக Fars செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது என்று அல்ஜசீராக கூறியிருக்கிறது.

மொக்கை வாங்கிய கடற்படை இந்த செய்தி அமெரிக்கா கடற்படை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது என நெட்டிசன்கள் கலாய்த்திருக்கின்றனர். குறிப்பாக டிரம்பின் அறிவிப்பை கேலி செய்து வருகின்றனர்.

நிலைமை ஒருபக்கம் இப்படி இருக்க, மறுபக்கம் அமெரிக்கா ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்ப இருக்கிறது என வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருக்கிறது.

துறைமுகம் முற்றுகை குறித்து ஈரான் சொன்னது என்ன? ஈரானின் உள்துறை அமைச்சர் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து கூறுகையில், “8,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நில மற்றும் கடல் எல்லைகளைக் கொண்ட ஈரானைப் பொறுத்தவரை, எத்தகைய பொருளாதாரத் தடையும் எவ்விதப் பலனையும் அளிக்காது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், சுதந்திர வர்த்தக மண்டலங்கள் உள்ளிட்ட பிற வழிமுறைகளைச் செயல்படுத்தி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார். ஈரானின் பாதுகாப்பு ஈரானின் வர்த்தகத்தில் பெரும்பகுதி நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் வழியாகவே நடைபெறுகிறது.

எனவே, அப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இக்காரணத்தினால், கடற்கரைப் பகுதிகள் மட்டுமின்றி, வளைகுடாப் பகுதி, ஓமன் கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படுவதை உறுதிசெய்ய, தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.

Previous Story

நவீன ஈரானுக்கு தலைமை தாங்கும் கலீபா!

Next Story

அமெரிக்காவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை.