டிரம்பால் மொத்த உலக நாடுகளும் முடங்கும்!

ஈரான் இதை செய்தாலே போதும்..

America attacks Iran! #USattackIran #DonaldTrump #IsraeliranWar #Netanyahu

ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா, ஈரானை தாக்கலாம் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் தான் ஈரான் நினைத்தால் மொத்த உலகத்தையும் முடங்க வைக்கலாம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஈரான் வசம் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி தான் காரணம்.

அது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். ஈரான்.. மத்திய கிழக்கில் முக்கியமான இஸ்லாமிய நாடாகும். இங்கு ஷியா இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளனர். அங்கு மொத்தம் சுமார் 9 கோடி மக்கள் உள்ளனர்.

ஈரானின் உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி கமேனி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது ஈரானில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக அவர்கள் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதனை தடுக்க ஈரான் அரசு முயன்று வருகிறது.

தற்போது வரை வரை சுமார் 2000 பேர் இறந்துள்ளதாகவும், பல்லாயிரக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாடு முழுவதும் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல் உடன் ஈரானுக்கு பகை உள்ளது. கடந்த ஆண்டு இந்த 2 நாடுகளும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினர்.

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது ஈரானில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அமெரிக்காவும், ஈரானும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இன்னும் ஒருபடி மேலே போன அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ,‛ஈரானில் மக்கள் போராட அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை முடக்க கூடாது. மீறினால் அமெரிக்கா தலையீடு செய்யும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

“இப்படி நாளுக்கு நாள் அமெரிக்காவுடன் ஈரானுக்கு மோதல் வலுத்து வருகிறது. மேலும் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா, ஈரானை தாக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த முறை அமெரிக்கா ஈரானை தாக்கினால் அது பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்கா தாக்கினால் பதிலுக்கு ஈரானும் தாக்கலாம். ஆனால் இறுதியில் அமெரிக்காவே வெல்லும். ஏனென்றால் அமெரிக்காவின் ராணுவ பலம் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.

ஈரானின் ராணுவ பலம் 16வது இடத்தில் உள்ளது. மேலும் விமானப்படை, கப்பற்படை, ராணுவம் என முப்படைகளிலும் தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. ஆனால் ஈரான் பின்தங்கி உள்ளது. இதனால் அமெரிக்காவுடன் மல்லுக்கட்டி ஈரானால் வெல்ல முடியாது.

அதோடு ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே அமெரிக்காவிடம் நீண்டகாலம் சண்டையிடவும் முடியாது. ஆனால் ஈரான் நினைத்தால் மொத்த உலக நாடுகளையும் கலங்க வைக்க முடியும்.

Political cartoon.

அதுதான் ஈரான் வசம் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி. இது ஈரான் வசம் உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி குறுகிய நீர்வழிப்பாதையாகும். ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையேயான கடலில் 21 மைல்கள் (34கிலோமீட்டர்) அகலத்தில் அமைந்துள்ளது. இது ஈரானுக்கு சொந்தமானது.

இதன் வடக்கே ஈரானும், தெற்கே ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளன. பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா, அரபி கடலுடன் இணைக்கும் பகுதியாக இந்த ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ளது.

மேலும் இதனை சுற்றி சில முக்கிய துறைமுகங்கள் உள்ளன. ஈரானில் பந்தர் அப்பாஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சொந்த புஜைரா, ஓமனின் சோஹர் துறைமுகம், கத்தாரின் ராஸ் லஃபான் துறைமுகங்கள் இந்த ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அமைந்துள்ளது.

இதில் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் என்பது ஈரானின் கடற்படை தளமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவின் மும்பை, ரஷ்யாவின் மாஸ்கோ பன்னாட்டு வழித்தடத்தில் இது அமைந்துள்ளது.

அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு சொந்தமான புஜைரா துறைமுகம் எண்ணெய் டேங்கர் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஓமனின் சோஹர் துறைமுகம் துபாய் – மஸ்கட் இடையே உள்ளது. கத்தாரின் ராஸ் லஃபான் உள்ளிட்ட துறைமுகம் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்கள் செல்கின்றன. இது ஒட்டுமொத்த சர்வதேகச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதம் ஆகும்.

குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த ரூட் வழியாகவே எண்ணெய் செல்கிறது.

இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியா, சீனா உள்பட ஆசிய சந்தைகளுக்கான கச்சா எண்ணெயில் 83 சதவீதம் வருகிறது.

இதனால் ஈரான் இந்த ஹர்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் பாதிக்கப்படும். இதனால் பிற நாடுகளிடம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கும் நிலை உருவாகும்.

இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை எகிறும். அதன் விலை அதிகரிக்கும். மேலும் இது அனைத்து பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல் சவுதி அரேபியா, கத்தார், ஈராக் உள்பட இஸ்லாமிய நாடுகள் கச்சா எண்ணெயை தான் பிரதான வருவாயாக கொண்டுள்ளன. இதனால் அந்த நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கும்.

இதனால் அந்த நாடுகளும் அமெரிக்கா மீது கோபத்தை காட்டலாம். இதனால் தான் ஈரானில் அமைதி நிலவ வேண்டும் என்பது அந்த நாட்டுக்கு மட்டுமின்றி மொத்த உலகத்துக்கும் முக்கியம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Previous Story

நாடாளும் வாக்குகளும் தீர்ப்பும்!

Next Story

මේ බේබදු ඥානසාරලාට තවදුරටත් රට විනාශ කරන්න දීලා ඔබ බලන් ඉන්නවාද