கண்டி மாவட்டத்தில் NPP. வேட்பாளராக டாக்டர் சாபி களமிறங்க தனது சம்மதத்தை தெரிவித்திருக்கும் நிலையில், அது பற்றிய இறுதித் தீர்மானங்கள் NPP. வேட்பாளர் தெரிவுக்குழுவின் முன்னிலையில் இப்போது இருக்கின்றது.
இந்த நேரத்தில் சாபியிடம் சென்றிருக்கும் நயவஞ்சக டீல் அரசியல் வியாபாரிகள் தயவு செய்து நீங்கள் கண்டியில் NPP. ஊடாக எமக்கு எதிராக களமிறங்க வேண்டாம் என்று கெஞ்சுவதுடன் குருணாகலையில் இருந்து போட்டியிடுங்கள்.
தமது வேட்பாளரை வேண்டுமானால் அங்கு சஜித் அணியில் இருந்து களமிறக்காது நாங்கள் உங்களது வெற்றிக்கு மறைமுகமாக ஒத்துழைப்பதாகவும் அவருக்கு வாக்குறுதிகள் கொடுத்திருப்பதாவும் நமக்கு அந்தத் தகவல்களில் இருந்து மேலும் தெரிய வருகின்றது.
மூன்றாம் தரப்பு ஊடாக டாக்டர் சாபி இதனை உறுதி செய்திருக்கின்றார் என்றும் சொல்லப்படுக்கின்றது.
குறிப்பு: நமது தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றால் அது பற்றி மறுப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் அந்த செய்திகளையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கின்றோம்.-நன்றி