ஜே.வி.பி அரசுக்கு மில்லியன் டொலர் கடனாக வழங்க இணங்கிய கனேடிய இலங்கையர்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் ஆட்சியமைக்கும் அரசாங்கத்திற்கு ஒரு மில்லியன் டொலர்களை கனடாவில் வசிக்கும் இலங்கையர் வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்படும் டொலரை நான்கு வருடங்கள் வரை திருப்பி செலுத்த தேவையில்லை. நான்கு வருடங்களின் பின்னர் செலுத்தும் வட்டி எதிர்பார்க்கப்பட மாட்டாது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான அரசாங்கத்திற்கு இவ்விதமாக டொலர்களை வழங்கி உதவி செய்ய உலகம் முழுவதும் பல இலங்கையர்கள் இருக்கின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் ஊடாக நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள போவதாகவும் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், அந்த அரசாங்கத்தின் நிதியமைச்சர் பொறுப்பு சுனில் ஹந்துன்நெத்தி வழங்கப்படும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.

Previous Story

பிரித்தானியா: குழப்பத்திற்கு மொத்த காரணம் அவர் மனைவி தான்!

Next Story

USA பொலிஸாரின் சூட்டிற்கு  கறுப்பின அமீர் லோக்கி  பலி!