ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு!

ஜுலை மாத முதல் வாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டம் | Ranil Will Lost The Election Says Udaya

சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு

இந்த வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை ஜனாதிபதி ரணில் தீர்மானிக்க உள்ளதாகத் கூறியுள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் ரணில் பின்னடைவை சந்தித்தால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினாலும், அரசியல் காரியாலங்கள் நிறுவப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

பாரிய தோல்வி

சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் ரணில் மூன்றாம் இடத்தை அடைந்தால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தாலும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என உதய கம்மன்பில கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் ஏதேனும் ஒர் தரப்புடன் கூட்டணி சேர்ந்தால் 15 முதல் 20 வீத வாக்குகளைப் பெறுவார் எனவும் தனித்து போட்டியிட்டால் பாரிய தோல்வியை தழுவ நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Story

விஜேவீர கடைசி 48 மணி நேரங்கள்!

Next Story

சஜித் வராமைக்கான நியாயங்கள்!