இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அபாயகரமான சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அப்போது திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள் என்று ஜப்பான் எச்சரிக்கை கொடுத்திருந்தது.
அனைத்து உலக நாடுகளும் சுனாமி எச்சரிக்கை விடுப்பது நார்மல் தான் என்றாலும் ஜப்பான் மட்டும் திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் இதுபோன்ற எச்சரிக்கை விடுக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது அனைவருக்கும் தெரியும்.
உலகின் ரிங் ஆஃப் பயர் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது ஜப்பான். இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இதற்கிடையே ஜப்பானில் இன்று எதிர்பாராத வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை சக்திவாய்ந்த 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அபாயகரமான சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
பசிபிக் பெருங்கடலில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இவாட், அமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் சுமார் 3 மீட்டர் (10 அடி) உயரத்திற்கு ராட்சத அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
![]()
இவாட் மாகாணத்தின் குஜி துறைமுகத்தில் அலைகள் கரையைத் தொடத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. டாஸ்க் போர்ஸ் ஜப்பான் பிரதமர் சனா ஏ தகாச்சி ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்யைும் அமைத்தார்.

கடலோரப் பகுதி மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளார். ஹச்சினோஹே துறைமுகத்தில் இருந்த கப்பல்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து “திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்” என்று ஜப்பான் எச்சரிக்கை கொடுத்திருந்தது.
ஏன் இதுபோன்ற எச்சரிக்கையை ஜப்பான் விடுத்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம். திரும்பிப் பார்க்க வேண்டாம் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும்போது அதிகாரிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான வாசகம் தான் இது.
“உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள், பின்னால் திரும்பிப் பார்க்காதீர்கள்!”, அதாவது Evacuate, don’t turn back.. 2011ல் ஜப்பானை உலுக்கிய அந்தப் பெருந்துயரத்திலிருந்து கற்றுக் கொண்ட ரத்தம் தோய்ந்த பாடங்கள் தான் இந்த எச்சரிக்கைக்குக் காரணம்.
என்ன காரணம் சுனாமி என்பது ஒரே ஒரு அலை அல்ல.. அது பல மணி நேரம் நீடிக்கக்கூடிய அலைகளின் வரிசை. முதல் அலை வந்து சென்றவுடன் கடல் அமைதியாகத் தெரிவதைப் பார்த்துவிட்டு, வீட்டைப் பூட்டவோ அல்லது வளர்ப்புப் பிராணிகளை அழைத்துச் செல்லவோ மக்கள் மீண்டும் வீட்டிற்குச் செல்வார்கள்.
ஆனால், முதல் அலையை விட இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் பல மடங்கு வேகம் மற்றும் உயரத்துடன் வந்து உயிரைப் பறிக்கும். ஆழ்கடலில் ஒரு ஜெட் விமானத்தின் வேகத்தில் பயணம் செய்யும் சுனாமி அலைகள், கரையை நெருங்கும்போதும் அதிவேகத்தில் வரும்.
நீங்கள் ஒரு 30 விநாடி திரும்பிப் பார்த்தால் கூட, மரணம் உங்களை முந்திவிடும். நிலம் அதிர்வது நின்றுவிட்டாலோ அல்லது கடல் நீர் உள்வாங்கினாலோ ஆபத்து நீங்கிவிட்டதாக மனித மனம் நம்பும்.
அந்த நம்பிக்கையை உடைக்கவே அதிகாரிகள் “திரும்பி வராதே” என்று மீண்டும் மீண்டும் கத்துகிறார்கள். முதல் அலை கரையைத் தொட்டுச் செல்லும்போது மின் கம்பிகள் அறுந்து கிடக்கும், கட்டிடங்கள் பலவீனமாக இருக்கும்.
அந்த இடிபாடுகளுக்குள் நீங்கள் நுழையும்போது அடுத்த அலை தாக்கினால், தப்பிக்கவே முடியாது. உயிர் முக்கியம் ஜப்பானைப் பொறுத்தவரை இப்போது அந்த வாசகம் வெறும் எச்சரிக்கை அல்ல; அதுதான் உயிர் காக்கும் மந்திரம்.
ஆசைப்பட்ட பொருள் எதுவானாலும் பிறகு சம்பாதிக்கலாம்… ஆனால் உயிர் போனால் திரும்ப வராது.. இதற்காகவே ஜப்பான் இப்படி ‘திரும்பிப் பார்க்காதே’ என்று எச்சரிக்கை விடுக்கிறது.




