ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்த இறுதி நபரும் வைத்தியசாலையில்..

ஜனாதிபதி செயலகம் முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேர்களில் கடைசி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தரும் நேற்றிரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம்

இந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்றைய தினம் ( 01.02.2026 ) ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்த இறுதி நபரும் வைத்தியசாலையில்.. | Person Fasting Front Of The President Office

7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகம் முன்பாக இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

"ඉරාන ප්‍රති ප්‍රහාරයට මුහුණ දෙන්න අවි ප්‍රමාණවත් නැහැ"- ඇමරිකානු නිලධාරීන්

Next Story

ஈரானுக்காக களமிறங்கியது CHINA