சௌக்கியம் கூண்டோடு கைலாசம்!

-நஜீப்-

(நன்றி ஞாயிறு தினக்குரல்- 20/07/2025) 

கைலாச பயணத்துக்கும் வாராந்த அரசியலுக்கும் என்னதான் உறவு.? ஆம் வாசகர்களே இருக்கு. சில தினங்களுக்கு முன்னர் நமது முன்னாள் சௌக்கிய அமைச்சர் அவரது மனைவி மூன்று மகள்கள்  மருமகன் என்று அனைவருக்கும் தற்போது அதி குற்றப்பத்திரிகை கையாளிக்கப்பட்டிருக்கின்றது.

கெஹெல்லிய மீது டசன் கணக்கில் குற்றச்சாட்டுகள் அனைவரும் அறிந்துதான். கைலாசம் போகின்றவர்கள் திரும்பி வருவதில்லை என்ற ஒரு கதை இருக்கின்றது.

அது மாதிரிதான் இந்த குடும்ப நிலையும். குடிகளின் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்ததற்காக குற்றச்சாட்டு.

இதிலிருந்து தப்ப முடியாது என்று தெரிந்த சௌக்கியம் சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றதாவும் ஒரு செய்தியை ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

பாரதூரமான இந்தக் குற்றசாசட்டுக்களை பதிவு செய்வதற்கான ஆவணங்களைத் தயாரிக்க மட்டும் 150 இலச்சம் வரை அரசு செலவு செய்திருக்கின்றதாம்.

எனவே ஒட்டு மொத்த தண்டணை என்று கூட்டிப்பார்த்தால்  சௌகியம் நூறுவருடங்களுக்கு மேல் உள்ளே இருக்க வேண்டி வரலாம். மனிதனுக்கு இப்போ வயது 70.!

 

Previous Story

எங்க கிட்ட மோதாதே- இப்ராஹிம் ட்ரொரே

Next Story

'இனி தேர்தல் கிடையாது '