சூரியனின் மண்டலத்திற்குள் நாசா!

சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் என்று கருதப்படும் அதன் வெளிப்புற சுற்றுவட்டப்பகுதிக்குள் நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் நுழைந்துள்ளது. மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் தலைப்பில் ஏன் கொரோனா என்று இருக்கிறதே என்று கேட்கிறார்களா? மேற்கொண்டு படியுங்கள் புரியும்! அமெரிக்காவின் நாசா மூலம் கடந்த 2018ல் விண்ணில் ஏவப்பட்டது பார்க்கர் சோலார் ப்ரோப் (The Parker Solar Probe). இந்த The Parker Solar Probe சூரியனை குறித்து ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் தன்மை எப்படி இருக்கிறது, அதன் வெளிப்புறம் எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இது விண்ணில் ஏவப்பட்டது.

இந்த நிலையில்தான் சூரியனின் வெளிப்புற வளிமண்டல பகுதியை நாசாவின் The Parker Solar Probe தொட்டுள்ளது. அதாவது சூரியனில் இருந்து 3.8 மில்லியன் மைல் தொலைவிற்கு அருகில் The Parker Solar Probe சென்றுள்ளது. Ads by Ads by சூரியன் சூரியன் தொடக்கத்தில் உருவான இடமாக கருதப்படும் பகுதிக்குள் இந்த The Parker Solar Probe சென்றுள்ளது. இந்த The Parker Solar Probeல் 4.5 இன்ச் தடிமானம் கொண்ட கார்பன் காம்போசைட் ஷீல்ட் ஒன்று உள்ளது. இதுதான் சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை தடுத்து The Parker Solar Probeஐ காப்பாற்றுகிறது.

சூரியனின் வெப்பத்தில் ஐஸ் கிரீம் போல The Parker Solar Probe உருகாமல் தடுப்பது இந்த ஷீல்ட்தான். ஷீல்ட் எப்படி? இந்த ஷீல்டின் வெளிப்புறம் மட்டும் 1377 டிகிரி செல்ஸியஸ் வரை செல்ல கூடியது. சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்பகுதியை கொரோனா என்று அழைப்பார்கள். அதாவது நமது வளிமண்டலம் எப்படி உயரத்தின் அடிப்படையில் ஸ்ட்ரேடோஸ்பியர், ட்ரோபோஸ்பியர், என்று பிரிக்கப்பட்டு இருக்கிறதோ அதேபோல் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் கொரோனா என்று அழைக்கப்படுகிறது. கொரோனா இந்த கொரோனாவிற்குள்தான் நாசாவின் The Parker Solar Probe புகுந்துள்ளது. இது இப்போது நடக்கவில்லை.

மாறாக கடந்த ஏப்ரல் மாதம் The Parker Solar Probe சூரியனின் இந்த பகுதிக்குள் நுழைந்துள்ளது. ஆனால் டேட்டா அடிப்படையில் இப்போதுதான் இதை நாசா உறுதிப்படுத்தியது. இந்த கொரோனா பகுதி சூரியனின் அருகாமை வளிமண்டலத்தை விட அதிக வெப்பநிலையுடன் இருக்கும். புழுதி இங்கே இருக்கும் புழுதி, வேகம் காரணமாக சூரியனின் அருகாமை பகுதியை விட இந்த பகுதி அதிக வெப்பநிலையாக இருக்கும். இதனால்தான் இப்போது கொரோனா பரப்பை The Parker Solar Probe தொட்டதை சூரியனை தொட்டதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் சூரியன் குறித்த புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த டேட்டாக்களை நாசா ஆராய்ந்து வருகிறது. கருப்பு நாசா எதிர்பார்த்ததை விட சூரியனின் இந்த கொரோனா பகுதி அதிக கருப்பு நிறத்திலும், புழுதியாகவும் இருந்துள்ளது.

இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகிறது. இது தற்போது 500000 கிமீ/ நேரம் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் மூன்று முறை சூரியனின் கொரோனா பகுதிக்குள் The Parker Solar Probe சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது. 5 மணி நேரம் மொத்தமாக 5 மணி நேரத்தில் இப்படி சூரியனின் வளிமண்டல பகுதிக்குள்ளே 3 முறை The Parker Solar Probe போய்விட்டு திரும்பி வந்துள்ளது. ஆனால் அந்த சுற்று வட்டாரத்தில் The Parker Solar Probe மிக குறைவான நேரம் மட்டுமே இருந்துள்ளது.

இதனால் அதில் கடுமையான புழுதி படிந்து இருந்தாலும், அதில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. சூரியன் இதன் மூலம் சூரியன் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடியும். 2025ல் மீண்டும் The Parker Solar Probe சூரியனுக்கு இன்னும் அருகில் செல்லும். மீண்டும் கொரோனாவிற்கு உள்ளே இன்னும் நெருக்கமாகி The Parker Solar Probe செல்லும். இது மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என்று நாசாகூறியுள்ளது.

Previous Story

2022:ரசிகர்கள் எதிர்பார்க்கும் தமிழ் 15 திரைப்படங்கள்!

Next Story

உலகின் புதிய 7 அதிசயங்கள் முதலிடத்தில் தாஜ்மஹால் !