சூடானில் கிளர்ச்சிப்படை தாக்குதல்: 200க்கும் மேற்பட்டோர் பலி

சூடானில் ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
Latest Tamil News
சூடானில் உள்நாட்டு போர் நடக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசு நிர்வாகம் என்பது இல்லை.

உள்நாட்டுப் போரில் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 80 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 34 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்று விட்டனர்.

Sudan's war kills over 9,000 in 6 months of 'humanitarian nightmare' : NPR

இத்தகைய சூழ்நிலையிலும், அரசு ஆதரவு குழுக்களுக்கும், கிளர்ச்சிப்படைகளுக்கும் தொடர்ந்து கொடூரமான போர் நடக்கிறது.

சூடானின் ஒயிட் நைல் மாகாணத்தின் அல்-கிடைனா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சி படையினர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாக்குதல் குறித்து சட்ட வல்லுநர் குழு கூறியதாவது:

Map of Khartoum

சூடானில் நடந்த மோதலின் போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட மனித உரிமை மீறல்களை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

ஆர்.எஸ்.எப்., கிளர்ச்சிப்படை, நிராயுதபாணியான பொதுமக்களைத் தாக்கி கொன்று குவிக்கிறது. இந்த தாக்குதலில் மரண தண்டனை, கடத்தல் மற்றும் சொத்து சூறையாடல் ஆகியவற்றை நடத்தி வருகிறது.

Previous Story

அரசு மீதான குடிகள் கணிப்பீடு விரைவில்;!

Next Story

வாராந்த அரசியல் 16.02.2025