சீனாவுக்கும் ஆப்பு!

ஏற்கெனவே பங்காளதேசுக்குக் கொடுக்க வேண்டிய குறுகிய காலக் கடனை இப்போது தரவசதியில்லை என்று இலங்கை கூறி காலத் தவணையை நீட்டிக் கேட்டது. அந்த காலத் தவணையும் விரைவில் வர இருக்கின்றது.

இதற்கிடையில் வரும் 21ம்திகதி சீனாவுக்கு ஒரு தொகைக் கடனைச் செலுத்த வேண்டி இருக்கின்றது. அதற்கும் ஆப்புத்தான் என்று தெரிகின்றது. இப்படிப் போகும் போது நாடு திவால் நிலை என்றுதான் முடிவாகும்.

சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை கடனை செலுத்த முடியாத நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21ஆம் திகதி செலுத்த வேண்டிய தவணை கடன்களை தற்போதைய சூழலில் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக இலங்கை சீன வங்கிகளிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன அபிவிருத்தி வங்கிக்கு 53.596 மில்லியன் டொலர்களும், சீனா Exim வங்கிக்கு 17 மில்லியன் டொலர்களும், 386.19 மில்லியன் யுவான்களும் அதே நாளில் இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. எனினும் அதனை அன்றைய தினம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

Previous Story

அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்டும் அலி சப்ரி

Next Story

இலங்கை பொருளாதார நெருக்கடி :விளக்கம்