சீனாவிடம் அமெரிக்க சரண்!

-யூசுப் என் யூனுஸ்-

அண்மையில் அமெரிக்க வெளிவிவகார இராஜதந்திரியான அண்டனி பிலிங்டன் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். இவரது விஜயம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தாலும், சீனாவின் ஆய்வு பலூன் ஒன்றை அமெரிக்க உளவு விமானம் என்று சொல்லி சுட்டதால் அன்று அந்த விஜயம் ரத்தானது. அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக அவர் சீன வரத் திட்டமிட்டாலும் அதனை சீனா கண்டு கொள்ளவில்லை.

பின்னர் தானாகவே அழைப்பின்றி சீனாவுக்கு அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார் என்றுதான் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. அங்கு போன பிலிங்டனை சீன அதிகாரிகள் வேண்டா வெறுப்புடன்தான் வரவேற்றிருந்தனர். அத்துடன் தங்களுடன் அமெரிக்க பேசுவதாக இருந்தால் உரிய மரியாதைகளடன் நடந்து கொள்ள முடியுமாக இருந்தால் மட்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்றும் அவர்கள் இராஜதந்திரியின் முகத்திற்கே சொல்லியும் இருக்கின்றனர்.

U.S. Secretary of State Antony Blinken meets with China's Foreign Minister Qin Gang at the Diaoyutai State Guesthouse in Beijing, China, June 18, 2023. REUTERS/Leah Millis/Pool TPX IMAGES OF THE DAY

அங்கு போன அண்டனி பிலிங்டனிடம் தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளை அவர்கள் கண்டித்திருந்தனர். இல்லை… இல்லை… தைவானை நாங்கள் சுதந்திர நாடாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர் அங்கு அந்தர் பல்டியடித்தார்.

இப்போது தைவானைக் கைவிட்டது போலத்தான் உக்ரைன் விவகாரத்திலும் அமெரிக்கா நடக்கும் என்று பேசப்படுகின்றது. இந்த சரணாகதி மூலம் சீனாவிடம் அமெரிக்கா பிச்சை கேட்க்கின்றது  என வட கொரிய நையாண்டி பண்ணி வருகின்றது.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பண்டாவுடன் முரண்படும் மகள்!

Next Story

போரில் சுழியோடும் தேசம்!