சிரியா மீது முழு தாக்குதல்..

அமெரிக்க படைகள், ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்’ நடவடிக்கையின் கீழ், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இலக்குகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

“போர் வீரர்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரறுக்கவும், எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும், பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் கூட்டாளிப் படைகளைப் பாதுகாக்கவும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றது” என்று அமெரிக்க மத்திய கட்டளைப்படை (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்குத் தீங்கு விளைவிக்க முயலும் பயங்கரவாதிகளைத் அகற்றுவதில் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகள் உறுதியாக இருப்பதாக சென்ட்காம் கூறியுள்ளது.  ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவதுதான் சென்ட்காம் ராணுவ பிரிவின் முக்கியமான பணி.

அந்த வகையில் நேற்று இந்த தாக்குதலை தொடுத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு டிச.19ம் தேதி ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்’ தொடங்கப்பட்டது. முன்னதாக கடந்த டிச.13ம் தேதி, சிரியாவின் பால்மிரா பகுதியில் அமெரிக்க மற்றும் சிரியப் படைகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பழி வாங்கும் விதமாக தற்போது அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத படைகளுக்கு சென்ட்காம் கடும் எச்சரிக்கை விடுத்தது. எக்ஸ் தளப் பதிவில் “எங்கள் செய்தி வலுவாக உள்ளது. எங்கள் போர் வீரர்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்தால், நீங்கள் எவ்வளவுதான் தப்பிச் செல்ல முயன்றாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களைக் கண்டுபிடித்து அழிப்போம்” என தெரிவித்திருக்கிறது.

அமெரிக்கா நடந்த தாக்குதலில், இருபதுக்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டு, 90-க்கும் அதிகமான துல்லியமான ஆயுதங்கள் மூலம் 35-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யாவுக்கு நெருக்கடி ரஷ்யாவுக்கு வெளியில் அதன் ராணுவம் உறுதியாக இருப்பது சிரியாவில்தான்.

சிரியா, ரஷ்யாவுடன் பல ஆண்டுகளாக நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, சிரியாவை தொடர்ந்து நட்டு நாடுகளின் பட்டியலில் ரஷ்யா வைத்து வருகிறது.

இருப்பினும் அங்கு இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான சவாலாக இருக்கின்றனர். இந்த விஷயத்தை பயன்படுத்தி அமெரிக்காவும் உள்ளே நுழைய முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

சிரிதரன் பந்தாடப்படுகிறாரா!

Next Story

அரசு பிளக்கிறதாம்-விமல்!